லக்னோ: பகுஜன் சமாஜ் கட்சியைச் சேர்ந்த 6 சட்டப்பேரவை உறுப்பினர்களும், பாஜகவைச் சேர்ந்த ஒரு சட்டப்பேரவை உறுப்பினரும் சமாஜ்வாதி கட்சியில் இணைந்துள்ளனர்.
உத்தரப்பிரதேசத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், அம்மாநிலத்தில் அரசியல் களம் சூடுபிடித்துள்ளது. முன்னாள் முதலமைச்சரும், சமாஜ்வாதி கட்சியின் தலைவருமான அகிலேஷ் யாதவ் முன்னிலையில், 6 பகுஜன் சமாஜ் கட்சி சட்டப்பேரவை உறுப்பினர்களும், ஒரு பாஜக சட்டப்பேரவை உறுப்பினரும் அக்கட்சியில் இணைந்தனர்.
ஆளுங்கட்சி, எதிர்க்கட்சிகள் உள்பட அனைத்து கட்சிகளும் தேர்தல் வாக்குறுதிகளை வழங்கி வாக்காளர்களை கவரும் நோக்கில் பேரணிகள், கூட்டங்களில் உரையாற்றி வருகின்றனர்.
மக்கள் நம்பிக்கையைப் பெறுவதற்கும், அடுத்த தேர்தலில் வெற்றி பெறுவதற்கும், தங்கள் எதிரிகளை ஓரம் கட்டுவதற்கு எந்த வாய்ப்பையும் கட்சிகள் விட்டுக் கொடுக்காமல் காய் நகர்த்தி வருகின்றன.
இதையும் படிங்க: கூண்டுக்கிளியான ஆர்யன் கான்.. இத்தனை நிபந்தனைகளா?