ETV Bharat / bharat

டெல்லியில் பிரதமர் மோடிக்கு எதிராக போஸ்டர்! 6 பேர் கைது - ஆம் ஆத்மிக்கு தொடர்பா? - ஆம் ஆத்மி கட்சி போஸ்டர்

பிரதமர் மோடியை பதவி நீக்கம் செய்யக் கோரி போஸ்டர் ஒட்டியதாக 6 பேரை கைது செய்து உள்ள போலீசார், ஆம் ஆத்மி கட்சி உறுப்பினர்கள் ஆகியோர் மீது 100 எப்ஐஆர்.களை பதிவு செய்து உள்ளனர்.

Etv Bharat
Etv Bharat
author img

By

Published : Mar 22, 2023, 1:03 PM IST

டெல்லி: பிரதமர் மோடியை பதவி நீக்கம் செய்யக் கோரி தலைநகர் டெல்லியில் போஸ்டர் ஓட்டப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக 6 பேரை போலீசார் கைது செய்து உள்ளனர். டெல்லியில் ஆளும் ஆம் ஆத்மி கட்சிக்கும், மத்தியில் உள்ள பாஜகவுக்கும் தொடர் ஏழாம் பொருத்தமாகவே உள்ளது.

மதுபான கொள்கை முறைகேடு, மேயர் தேர்தல் உள்ளிட்ட பல்வேறு சம்பவங்களில் டெல்லி அரசும், மத்திய அரசும் முட்டி மோதி வருகின்றன. இந்நிலைஒயில் நேற்று (மார்ச். 22) டெல்லி சட்ட சபையில் பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. முன்னாள் துணை முதலமைச்சர் மணிஷ் சிசோடியாவுக்கு பதிலாக நிதியமைச்சர் கைலாஷ் கெலாட் பட்ஜெட்டை தாக்கல் செய்வார் என தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில் சில காரணங்களுக்காக மத்திய உள்துறை அமைச்சகம், டெல்லி பட்ஜெட்டை நிறுத்தி வைக்கும்படி அரசுக்கு உத்தரவிட்டது. இதையடுத்து டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால், பிரதமர் மோடிக்கு எழுதிய கடிதத்தில், "நாட்டின் 75 ஆண்டுகால வரலாற்றில் டெல்லி பட்ஜெட் நிறுத்தப்படுவது இதுவே முதல் முறையாகும். இதற்காக டெல்லி மக்கள் வருத்தப்படுகின்றனர்" என்று கூறியிருந்தார்.

இதையடுத்து டெல்லியில் பட்ஜெட் தாக்கலுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் அனுமதி அளித்து உள்ளது. இந்நிலையில் டெல்லியின் முக்கிய சாலைகளில் பிரதமர் மோடியை பதவி நீக்கம் செய்யக் கோரி போஸ்டர்கள் ஒட்டப்பட்டு இருந்தன. இந்த சம்பவம் டெல்லியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில் இந்த சம்பவம் தொடர்பாக 6 பேரை கைது செய்து உள்ள டெல்லி போலீசார், ஆம் ஆத்மி கட்சியினர் மீது 100 எப்ஐஆர் பதிவு செய்து உள்ளனர். 44 ஆயிரத்திற்கு மேற்பட்ட போஸ்டர்களை கைப்பற்றி உள்ளதாகவும், சுவரொட்டிகளை அச்சிட்ட அச்சகம் உள்பட 6 பேர் மீது அச்சக மற்றும் சொத்து சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து உள்ளதாகவும் போலீசார் தெரிவித்தனர்.

இந்நிலையில் கைது செய்யப்பட்டவர்கள் டெல்லியில் உள்ள ஆம் ஆத்மி கட்சியின் அலுவலகத்தில் இருந்து வெளியே வரும் போது மடக்கி பிடிக்கப்பட்டதாக போலீசார் தெரிவித்து உள்ளனர். ஆம் ஆத்மி அலுவலகத்தில் இருந்து வெளியே வந்த வேனை மறித்து சோதனை நடத்திய போது பிரதமர் மோடிக்கு எதிரான வாசகங்கள் அடங்கிய போஸ்டர்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டதாக போலீசார் கூறியுள்ளனர்.

மேலும் இந்த போஸ்டர் அச்சடித்தது, மற்றும் ஊர் முழுவதும் ஓட்டியவர்களை தொடர்ந்து தேடி வருவதாக போலீசார் கூறினர். அதேநேரம் இந்த சம்பவத்திற்கு ஆம் ஆத்மி கட்சியினர் நேரடியாக பதில் கூற மறுத்து விட்டதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. தலைநகரில் பிரதமர் மோடிக்கு எதிராக போஸ்டர் ஒட்டப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

அதேநேரம், ஆம் ஆத்மி கட்சி தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில், "மோடி அரசின் சர்வாதிகாரம் உச்சத்தில் உள்ளது. மோடி ஜி 100 எப்ஐஆர் தாக்கல் செய்ய இந்த போஸ்டரில் என்ன ஆட்சேபனை உள்ளது. பிரதமர் மோடி, உங்களுக்குத் தெரியாது, இந்தியா ஒரு ஜனநாயக நாடு. ஒரு போஸ்டருக்கு இவ்வளவு பயம் ஏன்" என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இதையும் படிங்க: தலைநகரை உலுக்கிய நிலநடுக்கம் - என்ன காரணம்! முழு தகவல்கள்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.