மத்திய அரசின் 2021-22ஆம் நிதியாண்டிற்கான பட்ஜெட்டை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பிப்ரவரி 1ஆம் தேதி தாக்கல் செய்கிறார். இந்நிலையில், பட்ஜெட் தொடர்பாக மாநில நிதி அமைச்சர்களுடன் நிர்மலா சீதாராமன் காணொலி வாயிலாக ஆலோசனை மேற்கொண்டார். கூட்டத்தில் பங்கேற்றவர்களை நிதிச் செயலாளர் அஜய் பூஷண் வரவேற்றார்.
கூட்டத்தில், மாநில அமைச்சர்கள் தொற்று நோயின் மிக மோசமான காலங்களில் மாநிலங்களுக்கு நிதியளித்து ஆதரித்த மத்திய நிதி அமைச்சருக்கு நன்றி தெரிவித்தனர். மேலும், பட்ஜெட்டில் இடம்பெற வேண்டிய முக்கிய அம்சங்கள் பற்றி மாநில அரசுகளிடம் கருத்துக்களை நிர்மலா சீதாராமன் கேட்டுக்கொண்டதாக கூறப்படுகிறது. இக்கூட்டத்தில் தமிழ்நாடு அரசு சார்பில் துணை முதலமைச்சரும், நிதி அமைச்சருமான பன்னீர்செல்வம் கலந்துகொண்டார்.