ETV Bharat / bharat

மேற்கு வங்கத்தில் பப்புவை காணலாம்; மக்களவையில் நிர்மலா சீதாராமன் பதில்! - டெல்லி மக்களவை

திரிணாமுல் காங்கிரஸ் எம்பி மஹூவா மொய்த்ராவின் கருத்துக்கு பதிலளித்த மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மேற்கு வங்கத்தில் பப்புவை காணமுடியும் எனத் தெரிவித்துள்ளார்.

Etv Bharatமேற்கு வங்கத்தில்  பப்புவை காணலாம்  - திரிணாமுல்  எம்பிக்கு நிர்மலா சீதாராமன் பதிலடி

author img

By

Published : Dec 15, 2022, 11:45 AM IST

டெல்லி: மக்களவை விவாத கூட்டத்தில் இரு தினங்களுக்கு முன்பு பேசிய திரிணாமுல் காங்கிரஸ் உறுப்பினர் மொய்த்ரா இந்தியாவில் ஆளும் பாஜக அரசுதான் ’பப்பு’ என்ற வார்த்தையை உருவாக்கியது. தற்போது யார் உண்மையான பப்பு எனத் தெரியவந்துள்ளது எனவும், இந்தியா பொருளாதர மற்றும் தொழில்துறையில் பெரும் சரிவை கண்டுள்ளதாகவும் குற்றம்சாட்டினார். முன்னதாக பாஜக அரசு காங்கிரஸ் கட்சி எம்பி ராகுல் காந்தியை பப்பு என விமர்சித்து இருந்தது. இதனையடுத்தே இச்சொல் மக்களவையில் பல கட்சியினரால் உபயோகிக்கப்பட்டது.

இதற்கு பதிலளித்த நிர்மலா சீதாராமன் குஜராத் மற்றும் மேற்கு வங்கத்தில் தேர்தலுக்குப் பிந்தைய சூழல் குறித்து பேசிய போது, ‘சமீபத்தில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் பாஜக வெற்றி பெற்றதைத் தொடர்ந்து மேற்கு மாநிலம் அமைதியாக இருந்தபோதும், கிழக்குப் பகுதியில் பாஜக கட்சித் தொண்டர்கள் வீடுகளில் “கொள்ளை, பலாத்காரம் மற்றும் தீ வைப்பு போன்ற குற்றச்சம்பவங்கள் நடைபெற்றது” எனக் கூறினார்.

மேலும், “ஜனநாயகத்தில், மக்கள் அரசாங்கத்தின் கைகளில் தீக்குச்சியைக் கொடுக்கிறார்கள். எனவே, தீக்குச்சிகளை யார் கொடுத்தார்கள் என்பது கேள்வியாக இருக்கக்கூடாது, ஆனால் தீப்பெட்டிகள் எவ்வாறு பயன்படுத்தப்பட்டன என்பது முக்கியம் என்றும், மஹுவா மொய்த்ரா பப்பு எங்கே இருக்கிறார் என கேள்வி எழுப்பியுள்ளார். அக்கேள்விக்கு அவர் வீட்டின் பின்புறத்தில் பார்த்தால் பப்புவை காணமுடியும்” எனத் தெரிவித்துள்ளார்.

மத்திய அரசால் வழங்கப்படும் சாமானிய மக்களுக்குப் பயனளிக்கும் அற்புதமான திட்டங்கள் இருக்கும்போது, மேற்கு வங்கம் அதைச் செயல்படுத்தாமல் உள்ளது எனவும் நிர்மலா சீதாராமன் குற்றம்சாட்டினார்.

இதையும் படிங்க:ஒரு மாதத்திற்கு விவசாயிகளுக்கு டோல் கேட் இலவசம் - பஞ்சாபில் நடப்பது என்ன?

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.