ETV Bharat / bharat

நினைவு இல்லத்திற்கு அனுப்பி வைக்கப்பட்ட பாடகர் எஸ்.பி.பி. சிலை - தாமரைப்பாக்கம் நினைவு இல்லம்

புதுச்சேரியில் பாடகர் எஸ்.பி.பி.க்கு 6 டன் எடையில் தயாரிக்கப்பட்டு வந்த சிலையின் பணிகள் நிறைவடைந்ததை தொடர்ந்து, தாமரைப்பாக்கத்தில் உள்ள அவரது நினைவு இல்லத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது.

நினைவு இல்லத்திற்கு அனுப்பி வைக்கப்பட்ட பாடகர் எஸ்.பி.பி. சிலை

author img

By

Published : Mar 24, 2022, 6:44 AM IST

தனது வசீகரக் குரலால் மக்களின் மனதில் நீங்கா இடம்பிடித்த பிரபல பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் கடந்த 2020 செப்டம்பர் மாதம் காலமானார். அவருக்கு வயது 74. காஞ்சிபுரம் மாவட்டம் தாமரைப்பாக்கம் சர்வேஸ்வரா நகரில் உள்ள அவரது பண்ணை வீட்டில் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது. இந்த பண்ணை வீட்டில் எஸ்.பி.பி.க்கு நினைவு இல்லம் அமைக்கப்படும் என அவரது மகன் எஸ்.பி.சரண் தெரிவித்திருந்தார்.

ஓராண்டாக நடைபெற்று வரும் நினைவு இல்ல பணி தற்போது நிறைவடையும் நிலையில் உள்ளது. இவ்விடத்தில் 6 டன் எடை கொண்ட பாறையில் எஸ்.பி.பி.யின் சிலை வடிவமைக்கப்படவுள்ளது. இதனை புதுச்சேரி ஆலங்குப்பம் சஞ்சீவி நகரில் உள்ள சிற்ப கூடத்தில் சிற்பிகள் உருவாக்கி வந்தனர். புதுச்சேரி அருகே திருவக்கரையில் 6 டன் எடையில் பாறை எடுக்கப்பட்டு கடந்த 6 மாதங்களாய் பாறை சிலை உருவாக்கப்பட்டுள்ளது.

நினைவு இல்லத்திற்கு அனுப்பி வைக்கப்பட்ட பாடகர் எஸ்.பி.பி. சிலை
நினைவு இல்லத்திற்கு அனுப்பி வைக்கப்பட்ட பாடகர் எஸ்.பி.பி. சிலை

இதன் பணிகள் முடிவடைந்ததைத்தொடர்ந்து சிலை நினைவகத்திற்கு அனுப்பப்பட்டது. எஸ்.பி.பாலசுப்ரமணியம், "SARVE JANAASSU JANA BHAVANTHU...
SARVESU JANAA SSUKINO BHAVAN" என அடிக்கடி உச்சரிக்கும் சொல் பதிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க : 'ஜென்டில்மேன் 2' படத்தின் கதாநாயகி யார்? - சஸ்பென்ஸை உடைத்த தயாரிப்பாளர்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.