ETV Bharat / bharat

பாடகர் கேகே மரணத்தில் சந்தேகம் - போலீஸார் வழக்குப்பதிவு

author img

By

Published : Jun 1, 2022, 10:39 AM IST

பிரபல பாடகர் கேகேவின் மரணம் இயற்கைக்கு மாறானது என காவல்நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

பாடகர் கேகே மரணத்தில் சந்தேகம் - போலீஸார் வழக்குப்பதிவு
பாடகர் கேகே மரணத்தில் சந்தேகம் - போலீஸார் வழக்குப்பதிவு

கொல்கத்தா: பிரபல பாடகர் கேகே நேற்று (மே31) கொல்கத்தாவில் இசை நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றதற்கு பின்னர் நெஞ்சு வலி ஏற்பட்டு உயிரிழந்தார். இந்நிலையில் இவரது மரணத்தில் சந்தேகம் எழுந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

பின்னணி பாடகர் கே.கே மரணம், இயற்கைக்கு மாறான மரணம் என சந்தேகம் எழுந்துள்ளது. இதன் தொடர்பாக புதிய மார்க்கெட் காவல் நிலையத்தில் இன்று வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக கொல்கத்தா காவல்துறை டிசி (மத்திய) ரூபேஷ் குமார் தெரிவித்துள்ளார்.

காவல்துறை வட்டாரங்களின்படி, அவரது முகம் மற்றும் உதடுகளில் ஒரு காயம் காணப்பட்டதாகவும், அவர் ஹோட்டல் அறையில் சுருண்டு விழுந்தார் எனவும் தகவல் கிடைத்துள்ளது. கேகேவின் உடற்கூராய்வு இன்று கொல்கத்தாவில் நடைபெறுகிறது. இதன் பின்னர் மரணத்திற்கான தெளிவான காரணம் தெரியவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படிங்க:90s கிட்ஸ்களின் 'காதலை வளர்த்த' பிரபல பாடகர் கேகே காலமானார்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.