புதுச்சேரி மாநில அரசுக்கு துணை நிலை ஆளுநர் தடையாக இருப்பதாக கூறி பல்வேறு போராட்டங்களை மாநில அரசு நடத்திவருகின்றது. சில நாட்களுக்கு முன்பு அண்ணா சதுக்கம் அருகே தொடர் போராட்டம் நடத்திய முதலமைச்சர், போராட்டத்தை ஒத்தி வைத்து பல்வேறு போராட்டங்கள் நடத்தப்படும் என அறிவித்திருந்தார்.
அதன் ஒரு பகுதியாக மத்திய அரசு துணைநிலை ஆளுநரை திரும்பப் பெற கோரி ஆளும் காங்கிரஸ் கட்சி சார்பில் அண்ணா சிலை அருகே கையெழுத்து இயக்கம் நடைபெற்றது. கையெழுத்து இயக்கத்தை முதலமைச்சர் நாராயணசாமி தொடங்கிவைத்தார். அமைச்சர் கந்தசாமி, சட்டபேரவை உறுப்பினர்கள், கூட்டணி கட்சி தலைவர்கள், பொதுமக்கள் கையெழுத்திட்டனர்.