மான்சா: சித்து மூஸ்வாலாவின் உடல் மான்சா மருத்துவமனையிலிருந்து அவரது வீட்டிற்கு எடுத்துச் செல்லப்பட்டது. சித்து படுகொலை செய்யப்பட்டது தொடர்பான விசாரணை நடைபெற்று வருகிறது. இதன் தொடர்பாக பஞ்சாப் காவல்துறையினர் அடையாளம் தெரியாத சிலரை கைது செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பிரபல பஞ்சாபி பாடகரும், காங்கிரஸ் பிரமுகருமான சித்து மூஸ்வாலா சென்ற மே 29 அன்று மர்மநபர்களால் சுட்டு கொல்லப்பட்டார். சித்து படுகொலை செய்யப்பட்டதையடுத்து, அவரது ரசிகர்களும், பல பிரபலங்களும் அவருக்கு இரங்கல் தெரிவித்தனர்.
இந்நிலையில் அரசால் கொடுக்கப்பட்ட வந்த பாதுகாப்பு விலக்கப்பட்ட 24 மணி நேரத்தில் கொல்லப்பட்டது பல சந்தேகங்களை எழுப்பியுள்ளது. இந்நிலையில் மூஸ்வாலாவின் உடல் மான்சா மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு அவரது குடும்பத்தாரிடம் ஒப்படைக்கப்பட்டது.
இதையும் படிங்க:Exclusive: பஞ்சாப் பாடகர் சித்து மூஸ்வாலா சுட்டுக்கொலை; பின்னணி என்ன?