ETV Bharat / bharat

BJP functionary Arrested: பழங்குடியின இளைஞர் மீது சிறுநீர் கழித்த பாஜக பிரமுகர் கைது! - பழங்குடியின இளைஞர் மீது சிறுநீர் கழித்த பாஜக நபர்

மத்தியப்பிரதேசத்தில் பழங்குடியின இளைஞர் மீது சிறுநீர் கழித்த விவகாரத்தில் பாஜக பிரமுகரை போலீசார் கைது செய்துள்ளனர்.

BJP Executive Arrested
BJP Executive Arrested
author img

By

Published : Jul 5, 2023, 9:30 AM IST

Updated : Jul 5, 2023, 11:48 AM IST

போபால்: மத்தியப்பிரதேசத்தில் பழங்குடியின இளைஞர் மீது ஒருவர் சிறுநீர் கழிக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வந்தது. அந்த வீடியோவில், ஒரு கடையின் படியில் அமர்ந்திருக்கும் பழங்குடியின இளைஞர் மீது வாயில் சிகரெட்டுடன் வந்த நபர், பழங்குடியின இளைஞர் மீது சிறுநீர் கழிப்பது பதிவாகி இருந்தது.

அந்த வீடியோவை ட்விட்டரில் பகிர்ந்த காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் அப்பாஸ் ஹபீஸ், பழங்குடியின மக்களின் நலன் குறித்து பொய்யாக பேசும் பாஜக தலைவர்கள், ஏழை பழங்குடியின இளைஞர் மீது சிறுநீர் கழிப்பது போன்று நடந்து கொள்வதாகவும், இது கண்டிக்கத்தக்கது என்றும் பதிவிட்டு இருந்தார்.

மேலும் வீடியோவை மத்தியப்பிரதேச முதலமைச்சர் சிவராஜ் சிங் சவுகானுக்கு டேக் செய்த அவர், ‘இதுதான் பழங்குடியின மக்கள் மீது நீங்கள் கொண்டு உள்ள நலனா? ஏன் அந்த பாஜக தவைவர் இன்னும் கைது செய்யப்படவில்லை?’ என்றும் பதிவிட்டிருந்தார். மேலும் பழங்குடியின இளைஞர் மீது சிறுநீர் கழித்த நபர் பர்வேஷ் சுக்லா என்றும், அவர் பாஜக எம்எல்ஏ கேதர்நாத் சுக்லாவின் பிரதிநிதி என்றும் அவர் தெரிவித்திருந்தார்.

மேலும், பழங்குடியின இளைஞர் மீது சிறுநீர் கழித்த நபர் பாஜக மூத்த தலைவர்களுடன் ஒன்றாக இருக்கும் புகைப்படங்கள் இருப்பதாக அப்பாஸ் ஹபீஸ் அந்த ட்விட்டர் பதிவில் தெரிவித்து இருந்தார். அது மட்டுமல்லாது, பாஜக மூத்த தலைவர்களுடன் பர்வேஷ் சுக்லா இருக்கும் புகைப்படங்களையும் காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் வெளியிட்டு இருந்தார்.

டெல்லி ஆம் ஆத்மி எம்எல்ஏ நரேஷ் பல்யானும் இந்த வீடியோவை தன் சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்திருந்தார். இவ்வாறு சமூக வலைதளத்தில் இந்த வீடியோ வேகமாக பரவிய நிலையில், நெட்டிசன்கள் கண்டனம் தெரிவித்து வந்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தனர்.

இந்த சம்பவம் அம்மாநில அரசியலில் புயலை கிளப்பிய நிலையில், அம்மாநில முதலமைச்சர் சிவராஜ் சிங் சவுகான், இந்த சம்பவம் குறித்து முழுமையான விசாரணை நடத்தவும், தேசிய பாதுகாப்பு சட்டம் மற்றும் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கடுமையான விதிகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யவும் உத்தரவிட்டார்.

இந்த வீடியோ வைரலான உடன் பர்வேஷ் சுக்லா தலைமறைவாகிவிட்டதாக போலீசார் தெரிவித்தனர். நள்ளிரவு 2 மணியளவில் அவர் வேறு இடத்திற்கு தப்பிச் செல்ல முயன்றபோது போலீசார் அவரை கைது செய்தனர். முன்னதாக தலைமறைவாக இருந்த பர்வேஷ் சுக்லாவின் மனைவி மற்றும் பெற்றோரிடமும் போலீசார் விசாரணை நடத்தினர்.

இது குறித்து மத்தியப் பிரதேசத்தின் சித்தி மாவட்ட ஏஎஸ்பி அஞ்சு லதா பட்டேல், “குற்றம் சாட்டப்பட்டவரை காவலில் எடுத்துள்ளோம். அவர் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார். இந்த விவகாரத்தில் அடுத்தக்கட்ட சட்ட நடவடிக்கைகள் விரைவில் எடுக்கப்படும்" என்றார்.

இதையும் படிங்க: மோடி அவதூறு வழக்கு... ராகுல் மீது நடவடிக்கை எடுக்க இடைக்கால தடை... ஜார்கண்ட் உயர் நீதிமன்றம்!

Last Updated : Jul 5, 2023, 11:48 AM IST

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.