ETV Bharat / bharat

இணையத்தை கலக்கும் Shy Girl workout: அப்படியென்ன சிறப்பு?

உடற்பயிற்சியில் பெண்களின் தயக்கத்தை போக்கும் விதத்தில் சமூக வலைதளத்தில் டிரெண்டாகும் Shy Girl workout, இளம் தலைமுறையினருக்கு பெருமளவில் உதவுகிறது என்று ஆராய்ச்சி மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளது.

இணையத்தை கலக்கும் Shy girl workout
இணையத்தை கலக்கும் Shy girl workout
author img

By

Published : Jun 17, 2023, 10:56 PM IST

Updated : Jun 30, 2023, 3:07 PM IST

லண்டன்: சமீபநாட்களாக foodiee, pet lover போன்ற சமூக வலைதள வார்த்தைகள் அதிகளவில் நடைமுறை பயன்பாட்டில் ஊடுறிவியுள்ளது. இந்த சமூக வலைதள வார்த்தைகளில் அதிகம் பயன்படுத்தப்படும் வரிசையில் ஃபிட்னஸ் ஃப்ரீக் என்ற வார்த்தை சமீபத்தில் பல்வேறு உருவங்கள் பெற்றுள்ளது. பணம் பத்தும் செய்யும் என்ற பழமொழி போய் இன்று ஆண்ட்ராய்டு போன் எண்ணாததையும் செய்யும் அளவிற்கு நம் தலைமுறை மாற்றத்தைக் கண்டுள்ளது. ஆண்ட்ராய்டு போன் எதற்கும் பயன்படும் என்ற கட்டமைப்பின் படி, உணவு முதல் அனைத்து அத்தியாவசிய தேவைகளை பூர்த்தி செய்வதில் உயர்ந்த நிலை உள்ளது.

அந்த வகையில் மனிதர்களை உடற்பயிற்சி மற்றும் ஆரோக்கிய வாழ்வோடு இணைப்பதில் ஆண்ட்ராய்டு போன் நாளுக்குநாள் புதுவித நாட்டத்தை ஏற்படுத்தி வருகிறது. உணவு முறையிலிருந்து அன்றாட பழக்கவழக்கங்கள் வரை எதற்கெடுத்தாலும், டிரெண்ட் என்ற வார்த்தை நாட்டம் கொண்டுள்ளது. அந்த வகையில், உடற்பயிற்சியில் Shy girl workouts Trend என்பது தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

உடலை கட்டுக்கோப்புடனும், ஆரோக்கியத்துடனும் வைக்க பல்வேறு Workouts இருக்கும் பட்சத்தில் Shy girl workouts என்றால் என்ன? என்றும் இளம் தலைமுறையினரிடையே இது வேகமாக ட்ரெண்ட் ஆவதற்கான காரணம் என்று பார்க்கலாம்.

Shy Girl Workouts: இந்த வழக்கம், கடந்த 2022 ஆம் ஆண்டின் பிற்பகுதியில் அனைவரின் பழக்கத்திற்கு கொண்டு வரப்பட்டதாக தெரிய வருகிறது. இந்த நிலையில், இந்நாள் வரையிலும் உடற்பயிற்சி தரவரிசையில் டாப் டிரண்டிங்கில் நீடித்து வருகிறது. இந்த Workout பெண்களுக்கான பயன்பாடாக மட்டுமே கொண்டுவரப்பட்டுள்ளது. பெண்கள் உடற்பயிற்சிக்கு வருவது கணிசமாக உயர்ந்த நிலையில், சமூக வலைதளங்களின் வழியாக, இந்த பழக்கம் ஒரு சீற்றத்தை கண்டுள்ளது.

சிலர் உடற்பயிற்சி வரும் பட்சத்தில் workouts-ன் போது பெண்களுக்கு ஏற்படும் தயக்கத்தை குறைக்கும் நோக்கத்தில் இது டிரெண்ட் உருவானது. இயல்பாகவே, பெண்கள் சிலர் தங்களின் உடலில் தயக்கம் காட்டுவது வழக்கம். அந்த வகையில், பெண்களின் இந்த தயக்கத்தை போக்கும் வகையில், Shy Girl workouts அமைந்துள்ளது. சில பெண்களுக்கு தங்கள் உடலின் பாகங்கள் குறித்து பெண்கள் அதிக அக்கறை கொள்வது, மெலிந்த தேகத்தை ஆரோக்கியமாகவும், பருமனான உடலை கட்டுக்குள் கொண்டுவர செய்வதில் ஆர்வம் காட்டுவது மற்றும் அதற்காக, தகுந்த உணவுகளை தேடி உண்பது உள்ளிட்ட பல்வேறு செயல்பாடுகளில் ஈடுபடுவர்.

அந்த வகையில், சில பெண்கள் உடற்பயிற்சியின் போது, பொது இடம் என்பதாலும் அசாதாரண சூழலினாலும், தாழ்வு மனப்பான்மையினால் உடற்பயிற்சி செய்ய தயக்கம் காட்டுவதுண்டு. இந்த தயக்கத்தைப் போக்கும் விதத்திலும், கூடுதல் உறுதியை வலுப்படுத்த இந்த Workout உதவுகின்றது என்று ஆராய்ச்சியாளர்கள் நிரூபித்துள்ளனர். இந்த ட்ரெண்ட் ஆனது, உடற்பயிற்சி கூடத்தில் பெரிய அளவிலான இடத்தை ஆக்கிரமிப்பு செய்யாமல் குறைந்த இடத்தையும், ஒரு ஜோடி டம்ப்பெல்ஸ் போன்ற ஓரிரு உபகரணங்களை மட்டுமே பயன்படுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன.

இந்த ட்ரெண்டில் ஆரம்ப நிலையில் இருக்கும் அல்லது உடற்பயிற்சிக்குச் செல்வதில் ஆர்வத்துடன் இருக்கும் பெண்களை இலக்காகக் கொண்டுள்ளனர். உடற்பயிற்சிக்கூடத்தில் சுற்றிச் செல்லாமல் அல்லது சிக்கலான எடை இயந்திரங்களைப் பயன்படுத்தாமல் ஒரு நல்ல பயிற்சியைக் கொடுக்கின்றது. இந்த உடற்பயிற்சிகளின் ஆரம்ப நன்மை என்னவென்றால், உடற்பயிற்சிக்கு செல்வதற்கானபெண்களின் பயத்தைப் போக்க பெரிதளவில் உதவக்கூடும் என்றாலும், பயனர்களுக்கு அதிகாரம் அளிப்பது மற்றும் ஜிம்மில் இருப்பதைப் பற்றி அவர்களுக்கான அதிக நம்பிக்கையுடன் உணர உதவுவது போன்ற நீண்ட காலப் பலனையும் பெற இந்த ட்ரெண்டு வழிவகுக்கிறது.

இதன் பயன்கள்: இத்தகைய Workout-ன் மூலம் குறுகிய வட்டத்திற்குள் இருக்கும் பெண்களும் உடற்பயிற்சி ஈடுபாட்டிற்கு முன்வருவர். இவ்வாறு உடற்பயிற்சி நிலையங்களில் சென்று இதனை கற்றுக்கொள்ள இயலாத பெண்கள், இவற்றை சமூக வலைதளங்களில் இருந்தும் ஆர்வமுடன் கற்றுகொள்ளுகிறார்கள். இதன் மூலம், அவர்கள் தங்களுக்கு முன்பு இருந்த தயக்கத்தை விடுத்து சிறப்பான மன உறுதியை பெறுவதாக இந்த ஆராய்ச்சி தெரிவிக்கிறது.மேலும், இதன் பயன் குறிப்புகள் தினக்கணக்கில் பதிவிடும் போது, பிறரை ஊக்கப்படுத்தும் வகையிலும் நம்பிக்கையளிக்கும் வகையிலும் அமையும். பாலின சமத்துவத்திற்கு வழிவகுக்கும் இந்த டிரெண்ட் பெண்கள் தங்கள் தயக்கத்தை தகர்த்து உடல் வலிமையில் ஆர்வம் காட்டவும் அதனால் ஏற்படும் பல சிக்கல்களை எதிர்கொள்ளவும் உதவும்.இவற்றை சமூக வலைதளங்களில் பதிவிடும்போது அதைக் காணும், பிறருக்கும் இதன் மீதான அலாதியான நம்பிக்கை பிறக்கும். மேலும், பாலின சமத்துவத்திற்கு வழிவகுக்கும் இந்த டிரெண்ட், பெண்கள் தங்கள் தயக்கத்தை தகர்த்து உடல் வலிமையின் முக்கியத்துவத்தை பேணுவதற்கான சிந்தனையை அதிகரிக்க செய்கிறது.

இதையும் படிங்க: Drinking and lower muscle mass: அதீத குடிப்பழக்கத்தின் விபரீத விளைவு!- எச்சரிக்கும் மருத்துவர்கள்

Last Updated : Jun 30, 2023, 3:07 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.