நிகழாண்டுக்கான(2021) அமர்நாத் யாத்திரை ஜூன் 28 தொடங்கி, ஆகஸ்ட் 22வரை நடைபெறவிருந்தது. இதற்கான ஆன்லைன் முன்பதிவு இம்மாதம் தொடங்கும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், நாட்டில் கோவிட்-19 பெருந்தொற்று இரண்டாம் அலை தீவிரமாக பரவத்தொடங்கியுள்ளது. நாளொன்றுக்கு மூன்று லட்சத்துக்கும் அதிகமான பாதிப்பு ஏற்பட்டு வரும் நிலையில், பல முக்கிய நகரங்களில், இரவு நேர ஊரடங்கு(144 தடை உத்தரவு) அமல்படுத்தப்பட்டுள்ளது.
எனவே, தற்போதைய அசாதாரண சூழலை கருத்தில் கொண்டு அமர்நாத் யாத்திரைக்கான முன்பதிவு ரத்து செய்யப்படுவதாக, ஆலய நிர்வாகக் குழு அறிவித்துள்ளது. நிலைமையை தொடர்ந்து கவனித்து வருவதாகவும், பாதிப்பு குறைந்து சூழல் மேம்படும்பட்சத்தில் யாத்திரைப் பணிகள் தொடங்கும் என நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.