ETV Bharat / bharat

பிபின் ராவத் மரணம் சந்தேகங்களை எழுப்புகிறது - சஞ்சய் ராவத் கருத்து - சிவசேனா மாநிலங்களவை உறுப்பினர் சஞ்சய் ராவத்

ஹெலிகாப்டர் விபத்தில் பிபின் ராவத் மரணமடைந்தது மக்கள் மனதில் பல சந்தேகங்களை எழுப்புவதாக சிவசேனா எம்பி சஞ்சய் ராவத் தெரிவித்துள்ளார்.

Shiv Sena
Shiv Sena
author img

By

Published : Dec 9, 2021, 8:44 PM IST

இந்திய விமானப்படை விமானம் விபத்துக்குள்ளானதில் முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் உள்ளிட்ட 13 பேர் நேற்று மரணமடைந்தனர்.

நாட்டியே பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கிய இந்த மரணம் குறித்து சிவசேனா கட்சியின் மாநிலங்களவை உறுப்பினர் சஞ்சய் ராவத் தனது ஐயத்தை தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர், "தளபதி ராவத் சீனா மற்றும் பாகிஸ்தானுக்கு எதிராக முக்கிய ராணுவ வியூகங்களை மேற்கொண்டவர். முக்கியத்துவம் வாய்ந்த நபர் இதுபோன்று விபத்தில் உயிரிழப்பது மக்கள் மனதில் சந்தேகங்களை ஏற்படுத்துகிறது.

இரண்டு என்ஜின்களில் இயக்கப்படும் நவீன விமானத்தில்தான் ராவத் சென்றுள்ளார். பாதுகாப்பு படையை நாம் நவீனமாக்கியதாக கூறிக்கொள்கிறோம். அப்படியிருக்க இதுபோன்ற விபத்து எவ்வாறு ஏற்படுகிறது.

எனவே, நாட்டு மக்களின் சந்தேகத்தை பாதுகாப்பு அமைச்சரோ, பிரதமரோ தீர்த்துவைக்க வேண்டும் எனக் கோரியுள்ளார்.

இதையும் படிங்க: தாய்மொழியில் பேச தயங்கிய பெண் எம்பி, உரையாற்ற ஊக்கமளித்த சபாநாயகர்... குவியும் பாராட்டு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.