சிவசேனா நிறுவனர் பால் தாக்ரேவின் 96ஆவது பிறந்தநாள் நேற்று கொண்டாடப்பட்டது. இதையடுத்து மகாராஷ்டிரா முதலமைச்சரும், பால் தாக்ரேவின் மகனுமான உத்தவ் தாக்ரே சிவசேனா கட்சி தொண்டர்களிடம் காணொலி வாயிலாக உரையாற்றினார்.
அவர் பேசுகையில், " சிவசேனா கட்சி தனது 25 ஆண்டு காலத்தை பாஜகவுடன் கூட்டணி வைத்து வீணடித்துவிட்டது. இந்துத்துவத்தை தனது அரசியல் தேவைக்காக பாஜக பயன்படுத்திவருகிறது. தேசிய ஜனநாயக கூட்டணிக் கட்சிகளான சிவசேனா, அகாலி தளம் போன்ற கட்சிகள் பாஜகவின் மோசமான அணுகுமுறை காரணமாக கூட்டணியை விட்டு வெளியேறிவிட்டன.
இந்துத்துவ கொள்கை அடிப்படையில்தான் சிவசேனா பாஜகவுடன் கூட்டணி வைத்ததே தவிர அதிகாரத்திற்காக அல்ல. பாஜக தனது தேசிய கொள்கைகளை நிறைவேற்ற சிவசேனா முழு மனதுடன் ஒத்துழைப்பு நல்கியது. தேசிய அளவில் பாஜக வலுப்பெற்று மகாராஷ்டிராவை முன்னிறுத்தும் என நாங்கள் நம்பினோம். ஆனால், நாம் ஏமாற்றப்பட்டோம்.
எங்கள் வீட்டிலேயே எங்களை வீழ்த்த பாஜக முயன்றார்கள். அதனால்தான் நாங்கள் திருப்பி அடிக்கும் சூழல் ஏற்பட்டது. காலத்தின் சூழல் உணர்ந்து கட்சியின் அடிப்படை கட்டமைப்பை சிவசேனா தொண்டர்கள் வலுப்படுத்த வேண்டும்" என்றார்.
இதையும் படிங்க: 98 வயதிலும் ஆர்வத்துடன் பூஸ்டர் தடுப்பூசி செலுத்திக்கொண்ட பாட்டி