ETV Bharat / bharat

கோவா சட்டப்பேரவைத் தேர்தல்: சிவசேனா - தேசியவாத காங்., கூட்டணி - கோவா ஆம் ஆத்மி முதலமைச்சர் வேட்பாளர் அமித் பலேகர்

கோவா சட்டப்பேரவைத் தேர்தலில் சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் கட்சி கூட்டணி அமைத்து போட்டியிடவுள்ளதாக அக்கட்சியின் மூத்தத் தலைவர்கள் இன்று அறிவித்தனர்.

கோவா சட்டப்பேரவைத் தேர்தல்
கோவா சட்டப்பேரவைத் தேர்தல்
author img

By

Published : Jan 19, 2022, 6:58 PM IST

கோவா: உத்தரப் பிரதேசம், பஞ்சாப், உத்தரகாண்ட், கோவா, மணிப்பூர் ஆகிய ஐந்து மாநிலங்களுக்கு பிப்ரவரி மாதம் முதல் சட்டப்பேரவைப் பொதுத் தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த மாநிலங்களில் அரசியல் கட்சியினர் தேர்தல் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

இந்த நிலையில் 40 சட்டப்பேரவைத் தொகுதிகளைக் கொண்ட கோவா மாநிலத்தில் பிப்ரவரி 14ஆம் தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்தத் தேர்தலில் ஆளும் பாஜக, காங்கிரஸ், ஆம் ஆத்மி, திருணமூல் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் களம் கண்டுள்ளன. அதன்படி தீவிர வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

இதையடுத்து இன்று (ஜனவரி 19) தேசியவாத காங்கிரஸ் கட்சித் தலைவர்கள் பிரபுல் படேல், ஜிதேந்திரா அவாத், சிவசேனா கட்சி மூத்தத் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான சஞ்சய் ராவத் ஆகியோர் கூட்டாகச் செய்தியாளரைச் சந்தித்தனர். அப்போது, கோவா சட்டப்பேரவைத் தேர்தலில் சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் கட்சி (என்சிபி) கூட்டணி அமைத்துப் போட்டியிடுவதாக அறிவித்தனர்.

இதைத் தொடர்ந்து பேசிய சஞ்சய் ராவத், "மறைந்த கோவா முதலமைச்சர் மனோகர் பாரிக்கரின் மூத்த மகன் உத்பால் பாரிக்கர் தேர்தலில் சுயேச்சையாகப் போட்டியிட்டால் அவருக்கு ஆதரவு அளிப்போம்" எனத் தெரிவித்தார்.

முன்னதாக கோவா தேர்தலுக்கான ஆம் ஆத்மி முதலமைச்சர் வேட்பாளரை அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளரும், டெல்லி முதலமைச்சருமான அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்தார். பண்டாரி சமூகத்தைச் சேர்ந்த அமித் பலேகர் முதலமைச்சர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.

இதையும் படிங்க: Aparna Yadav Exclusive: பாஜகவில் இணைந்தது ஏன்? அபர்ணா யாதவ் பிரத்யேகப் பேட்டி!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.