மங்களூர்(கர்நாடகா): 122 மீட்டர் நீளமுள்ள சரக்கு கப்பல் ஒன்று கடந்த வியாழக்கிழமை காசராகோடு கடல்பகுதியில் டீசல் தீர்ந்து, ஜெனரேட்டர்கள் செயலிழந்த நிலையில் தவித்தது. கப்பலில் இருந்த பணியாளர்கள், கப்பலின் உரிமையாளருக்கும், இந்திய கப்பற்படைக்கும் தகவல் தெரிவித்தனர். தொழில்நுட்பக்குழுவினருடன் ஹெலிகாப்டரில் சென்ற கப்பல் படையினர், ஜெனரேட்டர்களை சரிசெய்ய உதவினர்.
சீரற்ற வானிலை நிலவிவந்த நிலையிலும், கடற்படையினர் ஹெலிகாப்டரில் சென்று கப்பலில் இருந்த 14 பேருக்கு தேவையான உதவிகளைச் செய்தனர். இந்நிலையில், அந்த சரக்கு கப்பலானது பாதுகாப்பாக மங்களூர் துறைமுகத்துக்கு இன்று காலை பாதுகாப்பாக வந்துவிட்டதாக கடலோர காவல்படை தெரிவித்துள்ளது.
-
#SafetyofSeafarers @IndiaCoastGuard prompt action averted potential disaster. Defect onboard MV JSW Mihirgad rectified by CSL engineers transferred per #ICG helicopter. Vessel safely entered #NewMangalore harbour today morning under own propulsion @shipmin_india @DefenceMinIndia pic.twitter.com/Qt1wpOkmjF
— Indian Coast Guard (@IndiaCoastGuard) June 19, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data="
">#SafetyofSeafarers @IndiaCoastGuard prompt action averted potential disaster. Defect onboard MV JSW Mihirgad rectified by CSL engineers transferred per #ICG helicopter. Vessel safely entered #NewMangalore harbour today morning under own propulsion @shipmin_india @DefenceMinIndia pic.twitter.com/Qt1wpOkmjF
— Indian Coast Guard (@IndiaCoastGuard) June 19, 2021#SafetyofSeafarers @IndiaCoastGuard prompt action averted potential disaster. Defect onboard MV JSW Mihirgad rectified by CSL engineers transferred per #ICG helicopter. Vessel safely entered #NewMangalore harbour today morning under own propulsion @shipmin_india @DefenceMinIndia pic.twitter.com/Qt1wpOkmjF
— Indian Coast Guard (@IndiaCoastGuard) June 19, 2021
மேலும், உரிய நேரத்தில் நடவடிக்கை எடுக்கப்பட்டதால், கப்பலில் இருந்த 14 பேரின் உயிர்கள் காப்பாற்றப்பட்டதாகவும் குறிப்பிட்டுள்ளது.
இதையும் படிங்க: மத்திய அமைச்சரவை மாற்றம்- புதுமுகங்களுக்கு வாய்ப்பு?