ETV Bharat / bharat

தடைகளைத் தாண்டி சாதனைப் படைத்த இமாச்சலப் பிரதேச பெண்! - இமாச்சலப் பிரதேசம்

டெல்லி: ஏழ்மையான குடும்பத்தில் பிறந்த இளம்பெண் ஒருவர், இமாச்சலப் பிரதேச அரசுப் பணியாளர் தேர்வாணையத்தில் சாதனை படைத்துள்ளார்.

சாதனை
சாதனை
author img

By

Published : Mar 25, 2021, 8:11 PM IST

இமாச்சலப் பிரதேச மாநிலத்தில் இளம்பெண் ஒருவர் அரசுப் பள்ளியில் படித்து, கடின உழைப்பின் காரணமாக அரசுப் பணியாளர் தேர்வாணையத்தில் நான்காம் இடம்பிடித்து சாதனைப் படைத்துள்ளார். 26 வயதே ஆன ஷிக்சா, பள்ளிக்குச் செல்வதற்காக பல மைல் தூரம் நடந்தே சென்றுள்ளார்.

பின்னர், சுவாடி கல்லூரியில் இளங்கலைப் பட்டப்படிப்பை முடித்த அவர், சிம்லாவில் உள்ள இமாச்சலப் பிரதேச பல்கலைக்கழகத்தில் முதுகலைப் பட்டபடிப்பை மேற்கொண்டார்.

அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் தேர்வுக்காகத் தன்னைத் தயார்ப்படுத்திக் கொண்டுள்ளார். இறுதியாக, விடாமுயற்சி கடின உழைப்பின் காரணமாகத் தேர்வில் மாநில அளவில் நான்காம் இடம்பிடித்தார். இது குறித்து ஷிக்சா கூறுகையில், "கல்விக்காகப் பெண்களுக்கு அனைத்து வாய்ப்புகளும் கிடைக்கப்பட வேண்டும்.

தடைகளைத் தாண்டி சாதனைப் படைத்த இமாச்சலப் பிரதேச பெண்

எனது தந்தை, அவருடைய ஏழு பெண் பிள்ளைகளையும் படிக்கவைத்தார். அதேபோல், அனைவரும் தங்களுடைய குழந்தைகளைப் படிக்க வைப்பதற்காக வாய்ப்பளிக்க வேண்டும். குழந்தைகளை விரும்பும் வரை படிக்கவைக்க வேண்டும்" என்றார்.

இது குறித்து ஷிக்சாவின் சகோதரர் கூறுகையில், "என்னுடைய சகோதரியின் வெற்றிக்கு கடின உழைப்பே காரணம். அவருடைய வெற்றிப் பயணம் அனைவருக்கும் உத்வேகம் அளிக்கும்" என்றார்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.