டாக்கா: வங்கதேசத்தில் நடந்து முடிந்த வாக்குப்பதிவு எண்ணிக்கையை நேற்று (ஜன.7) தேர்தல் ஆணையம் வெளியிட்டது. இந்த வாக்கு எண்ணிக்கையின் முடிவில் ஷேக் ஹசீனா(76) தலைமையிலான ஆளும் அவாமி லீக் கட்சி 50 சதவீதத்திற்கும் அதிகமான இடங்களை கைப்பற்றியது. 299 நாடாளுமன்ற தொகுதிகளைக் கொண்ட வங்கதேசத்தில், 12 வது நாடாளுமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கை முடிவுகள் வங்கதேச தேர்தல் ஆணையத்தால் வெளியிடப்பட்டுள்ளது. இதனை கோபால்கஞ்ச் துணை ஆணையரும் தேர்தல் அதிகாரியுமான காசி மஹ்புபுல் ஆலம் வெளியிட்டார்.
அவாமி லீக் தலைவரும் வங்கதேசத்தின் பிரதமருமான ஷேக் ஹசீனா, அந்நாட்டில் நடந்து முடிந்த பொதுத் தேர்தலில் கோபால்கஞ்ச்-3 தொகுதியில் போட்டியிட்ட நிலையில், அமோக வெற்றி பெற்றுள்ளார். இதன்மூலம் அவர் மீண்டும் நாடாளுமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அதே சமயம் இவரை எதிர்த்து போட்டியிட்ட வங்காளதேச சுப்ரீம் கட்சியைச் சேர்ந்த நிஜாம் உதின் லஷ்கர் வெறும் 469 வாக்குகளைப் பெற்று தோல்வியைத் தழுவினார். இதன்மூலம் அவாமி லீக் கட்சி அந்நாட்டில் மூன்றில் இரண்டு பங்கு வெற்றி வாய்ப்பைப் பெற்றதாக கூறப்படுகிறது.
அவர் 1986 ஆம் ஆண்டு முதல் 8வது முறையாக கோபால்கஞ்ச்-3 தொகுதியில் ஷேக் ஹசீனா வெற்றி பெற்றுள்ளார். இதுதவிர, ஆளும் அவாமி லீக் வேட்பாளர்கள் பெரும்பாலான இடங்களில் முன்னிலை வகிக்கின்றனர். இதனிடையே, அந்நாட்டின் பிரதான எதிர்க்கட்சியான தேசியவாத கட்சி (பிஎன்பி) தேர்தலை புறக்கணித்தனர். இந்த நிலையில், ஷேக் ஹசீனா ஐந்தாவது முறையாக பிரதமர் பதவியேற்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
அவாமி லீக் தலைவர் ஜில்லுர் ரஹ்மான் நேற்று முன்ஷிகஞ்சில் உள்ள வாக்குச்சாவடி மையத்திற்கு அருகில் சடலமாக கண்டெடுக்கப்பட்டார். முன்ஷிகஞ்ச்-3 லிருந்து அவாமி லீக் வேட்பாளரான மிருணாள் காந்தி தாஸின் ஆதரவாளிப்பதற்காக அங்கு சென்றிருந்தார். அப்போது, திடீரென அங்கு சட்டோகிராமில் உள்ள சந்த்கான் பகுதியில் எதிர்க்கட்சியான பிஎன்பி கட்சியினருக்கும் போலீசாருக்கும் இடையே மோதல் வெடித்தது.
இந்த சம்பவத்தின் போது, சாலையின் நடுவே டயர்களை எரித்து பங்களாதேஷ் தேசியவாத கட்சியினர் சாலைமறியல் போராட்டமும் நடத்தினர். அப்போது போலீசார் மீது கல்வீச்சு சம்பவங்களும் அரங்கேறின. இதற்கிடையே, நடந்த கலவரத்தில் இவர் உயிரிந்திருக்கலாம் எனக் கூறப்படுகிறது.
மேலும், இந்த மோதல் சம்பவத்தின் போது டாக்கா அருகே ஹசாரிபாக்கில் உள்ள வாக்குச்சாவடி மையத்திற்கு அருகே அடையாளம் தெரியாத இரண்டு பேர் நடத்திய சம்பவத்தில் ஒரு குழந்தை உட்பட 4 பேர் காயமடைந்தனர். தொடர்ந்து நார்சிங்டி-4 சட்டமன்ற தொகுதியின் மோனோஹார்டி-பெலாபோ பகுதியில் வாக்கு சீட்டுகள் சட்டவிரோதமாக திணிக்கப்பட்டதாக வாக்குப்பதிவை தேர்தல் ஆணையம் ரத்து செய்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: பிரதமர் மோடி குறித்து அவதூறு: 3 மாலத்தீவு அமைச்சர்கள் இடைநீக்கம்.. முழு பின்னணி என்ன?