இந்தியாவில் மூத்த அரசியல்வாதிகளில் ஒருவரான சரத் பவார் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவியிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். தற்போது அவருக்கு வயது 83.
சரத் பவார் கட்சியின் தலைமைப் பொறுப்பில் இருந்து விலகினாலும் கூட்டுறவு, கலாசாரம், விளையாட்டு ஆகிய துறைகளில் வளர்ச்சிப் பணிகளில் ஈடுபடப் போவதாக கூறியுள்ளார். சரத் பவார் தற்போது மாநிலங்களவை உறுப்பினராக உள்ளார். மேலும் சரத் பவார் 4 முறை மகாராஷ்டிரா மாநில முதலமைச்சராகப் பதவி வகித்துள்ளார்.
இதையும் படிங்க: The Kerala Story: தேசிய கவனத்தை ஈர்த்த 'தி கேரளா ஸ்டோரி' - உண்மையை நிரூபித்தால் ரூ.1 கோடி பரிசு என அறிவிப்பு!
இந்நிலையில் சரத் பவார் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைமைப் பொறுப்பில் இருந்து வெளியேறுவதாக, வெளியிட்ட அறிவிப்பை வாபஸ் பெற வேண்டும் என அக்கட்சியினர் மும்பையில் போராட்டம் நடத்தி வருகின்றனர். இருப்பினும், அவரது முதுமை காரணமாக, இந்த முடிவை எடுத்துள்ளதாக, அவரது நெருங்கிய சகாக்கள் தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க: Karnataka Congress: அரசு பேருந்துகளில் மகளிருக்கு இலவச பயணம், குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ.2,000 -காங்., தேர்தல் வாக்குறுதி முழு விபரம்!