ETV Bharat / bharat

20 நாள்களுக்கு பின் 10 நிமிடங்கள்: சிறையில் மகனை சந்தித்த ஷாருக் கான்! - no bail for aryan khan

போதைப் பொருள் பயன்படுத்திய குற்றச்சாட்டில், சிறையில் அடைக்கப்பட்டுள்ள தனது மகன் ஆர்யன் கானை, நடிகர் ஷாருக் கான் இன்று காலை 10 நிமிடங்கள் சந்தித்துப் பேசினார்.

Shahrukh khan meets Aryan in ARTHUR ROAD jail, Shahrukh khan, ஆர்யன் கானை சந்தித்த ஷாருக் கான், ஷாருக் கான், ஆர்யன் கான்
Shahrukh khan meets Aryan in ARTHUR ROAD jail
author img

By

Published : Oct 21, 2021, 10:37 AM IST

Updated : Oct 21, 2021, 11:13 AM IST

மும்பை: போதைப் பொருள் பயன்படுத்திய குற்றச்சாட்டில், பிரபல நடிகர் ஷாருக் கானின் மகன் ஆர்யன் கான் கைதுசெய்யப்பட்டு சிறைக்காவலில் உள்ளார். மும்பை ஆர்தர் ரோடு சிறைச்சாலையில் தற்போது ஆர்யன் கான் வைக்கப்பட்டுள்ளார்.

இதையடுத்து, ஆர்யன் கான் தரப்பு பிணை கேட்டு சிறப்பு நீதிமன்றத்தை அணுகிய நிலையில், ஆர்யன் கானின் பிணை மனுவை நீதிமன்றம் நேற்று (அக். 20) நிராகரித்தது.

இந்நிலையில், ஆர்தர் ரோடு சிறைச்சாலையில் உள்ள ஆர்யன் கானை, அவரது தந்தையும், பிரபல நடிகர் ஷாருக்கான் இன்று (அக். 21) சந்தித்து பேசினார்.

சிறையில் மகனை சந்தித்த ஷாருக்
சிறையில் மகனை சந்தித்த ஷாருக்

இதற்காக காலை 9 மணிக்கெல்லாம் ஷாருக்கான் சிறைக்கு வந்திருந்தார், அங்கிருந்து பாதுகாப்புடன் சிறைக்குள் சென்ற அவர் ஆர்யன் கானை சந்தித்து 10 நிமிடங்கள் பேசினார். தொடர்ந்து அவர் 9.35 மணிக்கு அங்கிருந்து கிளம்பினார்.

சிறையில் மகனை சந்தித்த ஷாருக் கான்

அப்போது அவர் சோகத்துடன் காணப்பட்டார். ஆர்யன் கான் பிணை மனு நிராகரிக்கப்பட்டதை அடுத்து, ஆர்யன் கான் தரப்பு மும்பை உயர் நீதிமன்றத்தை நாடவுள்ளதாகக் கூறப்பட்டது. மேலும், ஆர்யன் உள்பட மூன்று பேருக்கு பிணை மறுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: போதைப்பொருள் வழக்கில் ஆர்யன் கானுக்கு பிணை மறுப்பு

Last Updated : Oct 21, 2021, 11:13 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.