பாரபங்கி: 2022-ம் ஆண்டு டிசம்பர் 5-ம் தேதி இப்ராஹிமாபாத் கிராமத்தில் உள்ள வயல் வெளியில் மூதாட்டி ஒருவர் நிர்வாண நிலையில் கொல்லப்பட்டுக் கிடந்தார். சடலத்தைக் கைப்பற்றி உடற்கூராய்வுக்காக போலீசார் அனுப்பி வைத்தனர். பிரேதப் பரிசோதனை முடிவில், மூதாட்டியை கொலை செய்த பின், அவரது சடலம் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டது தெரியவந்தது. இச்சம்பவம் கிராம மக்கள் மத்தியில் பெரும் பீதியை ஏற்படுத்தியது.
டிசம்பர் 17ம் தேதி மற்றொரு மூதாட்டி இதே பாணியில் கொல்லப்பட்டது அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் சைக்கோ கொலையாளிகளை தீவிரமாகத் தேடி வந்தனர். குற்றவாளிகளை உடனடியாக கைது செய்து, தங்கள் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என கிராம மக்கள் போலீசாருக்கு கோரிக்கை விடுத்தனர்.
இதற்கிடையே, ஹன்ஹூனா கிராமத்தைச் சேர்ந்த மூதாட்டியைக் கடந்த ஜனவரி 23ம் தேதி இளைஞர்கள் இருவர் கொலை செய்ய முயன்றனர். மூதாட்டி அலறிய நிலையில், அங்கு திரண்ட கிராம மக்கள் அம்ரீந்தர் என்ற இளைஞரை சுற்றிவளைத்து பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர். இச்சம்பவத்தில் தொடர்புடைய சுரீந்தர் என்பவர் தலைமறைவானார்.
பின்னர் அம்ரீந்தர் மீது ராம்சனேகி காட் போலீசார் 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், மூதாட்டிகளை கொலை செய்து சடலங்களை பாலியல் வன்கொடுமை செய்ததாக வந்தததாக ஒப்புக் கொண்டார். அம்ரீந்தர் மற்றும் சுரீந்தர் ஆகியோர் அரிசி ஆலையில் பணியாற்றி வந்துள்ளனர். இருவரும் ஒன்றாக செல்போனில் ஆபாச படம் பார்ப்பதை வழக்கமாக கொண்டிருந்த நிலையில், சைக்கோ குற்றவாளிகளாக மாறியது விசாரணையில் அம்பலமானது.
இந்நிலையில் அம்ரீந்தர் அளித்த தகவலின் அடிப்படையில், சுரீந்தரை போலீசார் நேற்று (மார்ச் 22) கைது செய்தனர். அவரிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதுகுறித்து போலீசார் கூறுகையில், "கைதான இருவரும் தனியான இடங்களில் வசிக்கும் மூதாட்டிகளை குறிவைத்து அவர்களை கொலை செய்து வந்துள்ளனர். அதுமட்டுமின்றி, கொலை செய்த பின் சடலங்களை பாலியல் வன்கொடுமை செய்ததும் பிரேதப் பரிசோதனை அறிக்கையில் உறுதி செய்யப்பட்டுள்ளது.
ஏற்கனவே இரண்டு மூதாட்டிகளை கொலை செய்த நிலையில், மற்றொரு மூதாட்டியை கொலை செய்ய முயன்ற போது அம்ரீந்தர் பிடிபட்டுள்ளார். அதன்பிறகு சுரீந்தர் கைது செய்யப்பட்டுள்ளார். இருவரிடமும் தீவிரமாக விசாரணை நடத்தி வருகிறோம்" என்றனர்.
தனியாக வசிக்கும் மூதாட்டிகளை குறிவைத்து கொலை செய்யும் சைக்கோ குற்றவாளிகள் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளதால், பாரபங்கி மாவட்ட மக்கள் சற்று நிம்மதி அடைந்துள்ளனர்.
இதையும் படிங்க: திருடர்கள் அனைவருக்கும் மோடி என பெயர்" - அவதூறு பேச்சுக்காக ராகுலுக்கு சிறை