ETV Bharat / bharat

திருமணத்தில் முடியவில்லை என்றாலும், மனம் ஒத்த பாலியல் உறவு வன்கொடுமை ஆகாது - கேரள உயர்நீதிமன்றம்! - மனம் ஒத்து உடலுறவு வைத்துக் கொள்ளவது சட்டப்படி பாலியல் வன்கொடுமை ஆகாது

திருமணத்தில் முடிக்கவில்லை என்பதற்காக, மனம் ஒத்த பாலியல் உறவை வன்கொடுமை என்று கூற முடியாது என கேரள உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

Sexual relationship
Sexual relationship
author img

By

Published : Jul 8, 2022, 9:53 PM IST

கேரளா: கேரளாவைச் சேர்ந்த நவநீத் என்ற வழக்கறிஞர், தன்னை திருமணம் செய்வதாக கூறி பாலியல் வன்கொடுமை செய்துவிட்டு ஏமாற்றியதாக பெண் வழக்கறிஞர் ஒருவர் கேரள உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

திருமணம் செய்வதாக கூறி சுமார் 4 ஆண்டுகளாக உடலுறவு வைத்திருந்ததாகவும், இதனால் இரண்டு முறை கருக்கலைப்பு செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டதாகவும், இந்த நிலையில் வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்ய நவநீத் முடிவு செய்துவிட்டதாகவும் மனுவில் தெரிவித்திருந்தார்.

இதனால் பாலியல் வன்கொடுமை, கருக்கலைப்பு உள்ளிட்ட குற்றத்திற்காக நவ்நீத் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மனுவில் கோரியிருந்தார். இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, இருவருக்கும் இடையே மனம் ஒத்த பாலியல் உறவுதான் இருந்தது என மனுதாரரே குறிப்பிட்டுள்ளதாக வாதிட்டார்.

இதனிடையே இந்த வழக்கில் ஜாமீன் கோரி நவநீத் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், 18 வயதுக்கும் மேற்பட்ட இரண்டு பேர், மனம் ஒத்து உடலுறவு வைத்துக் கொள்ளவது சட்டப்படி பாலியல் வன்கொடுமை ஆகாது என தெரிவித்தார்.

இருவரது உறவை திருமணத்தில் முடிக்கவில்லை என்ற காரணத்திற்காக, மனம் ஒத்த உடலுறவை பாலியல் வன்கொடுமை என்று கூற முடியாது என்றும், பெண்ணின் விருப்பம் இன்றி அவளை கட்டாயப்படுத்தியிருந்தால் மட்டுமே அது பாலியல் வன்கொடுமையாகும் என்றும் தெரிவித்தார். இந்த கருத்துகள் வழக்கு விசாரணையை ஒருபோதும் பாதிக்காது என தெரிவித்த நீதிமன்றம், நவநீத்திற்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது.

இதையும் படிங்க: Video: வெள்ளத்தில் சிக்கிய பள்ளி பேருந்து - 25 மாணவர்கள் பத்திரமாக மீட்பு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.