ETV Bharat / bharat

மனைவியுடன் கட்டாய பாலியல் உறவு வன்புணர்வு ஆகாது - சத்தீஸ்கர் உயர் நீதிமன்றம் தீர்ப்பு - மனைவியை பாலியல் வன்புணர்வு

18 வயதுக்கு மேற்பட்ட மனைவியுடன் கணவர் கட்டாய பாலியல் உறவு வைத்துக்கொண்டாலும் அது வன்புணர்வு ஆகாது என சத்தீஸ்கர் உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

Chhattisgarh HC
Chhattisgarh HC
author img

By

Published : Aug 27, 2021, 10:03 AM IST

சத்தீஸ்கர் மாநிலம் பெமெதாரா மாவட்டத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் தனது கணவருக்கு எதிராக வன்கொடுமை, பாலியல் வன்புணர்வு ஆகிய பிரிவுகளின்கீழ் காவல் துறையில் வழக்குப்பதிவு செய்தார். தன் மீதான இந்தப் பாலியல் வன்புணர்வு வழக்கைத் தள்ளுபடி செய்ய வேண்டும் எனப் புகாரளித்த பெண்ணின் கணவர் சத்தீஸ்கர் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல்செய்தார்.

இந்த வழக்கானது சத்தீஸ்கர் உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி சந்திரவன்ஷி, 18 வயதுக்கு மேற்பட்ட தம்பதியில் ஒருவர் மற்றொருவருடன் கட்டாய பாலியல் உறவு வைத்துக்கொண்டால், அதை பாலியல் வன்புணர்வாகக் கருத முடியாது எனக் கூறி கணவரை வழக்கிலிருந்து விடுதலை செய்தார்.

இந்தியாவில் திருமணமான தம்பதி ஒருவர் மீது மற்றொருவர் பாலியல் வன்புணர்வுப் பிரிவின்கீழ் தொடுக்கப்பட்ட வழக்குகளில் தொடர்ந்து மாறுபட்ட தீர்ப்புகள் வருவது வழக்கமாகியுள்ளது.

இந்தியாவில் திருமண நபர் தனது இணையை கட்டாய உறவிலோ, வன்புணர்வோ செய்தால் அதை பாலியல் குற்றமாகக் கருதி தண்டனை வழங்கும் சட்டம் இல்லை. இதில் மாற்றம் கொண்டுவந்து விருப்பமற்ற உறவுக்குத் தண்டனை வழங்க வேண்டும் என நீதிபதி ஜே.எஸ். வர்மா கமிட்டி 2013ஆம் ஆண்டு பரிந்துரைசெய்துள்ளது.

இதையும் படிங்க: கோவிஷீல்டு தடுப்பூசியின் இரண்டு தவணைகளுக்கான இடைவெளி குறைகிறது - அரசு தகவல்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.