ஷில்லாங் (மேகாலயா): 10 வயது சிறுமி பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானதாக தொடரப்பட்ட வழக்கு மேகாலயா உயர் நீதிமன்றத்தில் இன்று (மார்ச் 17) விசாரணைக்கு வந்தது.
அப்போது நீதிபதிகள், ஆடைகளைக் கழற்றாமல் பாலியல் சீண்டலில் ஈடுபடுவது சட்டப்பிரிவு 375(பி)இன் படி பாலியல் பலாத்காரமாகவே கருதப்படும் என்று கூறினர்.
மேலும், இந்த வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டவர் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததாக விசாரணை நீதிமன்றத்தில் நிரூபிக்கப்பட்டது. குற்றஞ்சாட்டப்பட்டவருக்கு 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை, ரூ.25,000 அபராதம் விதித்து மேகாலயா உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
வழக்கின் பின்னணி
2006ஆம் ஆண்டு புகார்தாரர் 10 வயதாக இருந்தபோது பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானதாக தொடரப்பட்ட வழக்கில் மேகாலயா உயர் நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துள்ளது. அந்தப் புகாரில் குற்றஞ்சாட்டப்பட்டவர் சிறுமியின் ஆடைகளைக் கழற்றி பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாகப் புகார் தெரிவிக்கப்பட்டது.
முன்னதாக அந்தச் சிறுமி விசாரணையில் குற்றஞ்சாட்டப்பட்டவர், தன் ஆடைகளைக் கழற்றவில்லை எனக் கூறி, முதலில் பயந்து கூறியது தெரியவந்தது.
இந்தநிலையில், ஆடைகளைக் கழற்றாமல் பாலியல் சீண்டலில் ஈடுபடுவதும் சட்டப்பிரிவு 375(பி)இன் படி பாலியல் பலாத்காரமாகவே கருதப்படும் எனக் கூறி, மேகாலயா உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
இதையும் படிங்க: சஸ்பென்ஸ் உடைத்த பகவந்த் மாண்: ஊழலுக்கு எதிராக நடவடிக்கை!