ETV Bharat / bharat

'15 வயதுக்கு மேலுள்ள மனைவியுடன் உறவு வைத்துக்கொள்வது வன்புணர்வு ஆகாது'

பதினைந்து வயதுக்கு மேல் உள்ள மனைவியுடன் உடலுறவு வைத்துக்கொள்வது பாலியல் வன்புணர்வில் சேராது என அலகாபாத் உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

Allahabad High Court
Allahabad High Court
author img

By

Published : Aug 6, 2021, 10:22 AM IST

வரதட்சணை கொடுமை, இயற்கைக்கு மாறாக உடலுறவு வைத்து சித்ரவதை செய்த காரணங்களுக்காக உத்தரப் பிரதேசம் மாநிலம் மொரதாபாத்தைச் சேர்ந்த குஷாபே அலி என்ற நபர் கைதுசெய்யப்பட்டார். இவர் அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் பிணை கோரி மனு அளித்திருந்தார்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி மோஹ்த் அஸ்லாம், இந்திய தண்டனைச் சட்டத்தின் பிரிவு 375இன்படி, 15 வயதுக்கு மேல் உள்ள பெண்ணுடன் (சிறுமி) உடலுறவு வைத்துக்கொள்வது பாலியல் வன்புணர்வு ஆகாது எனத் தெரிவித்தார்.

1860ஆம் ஆண்டு வகுக்கப்பட்ட இந்திய தண்டனைச் சட்டப்பிரிவு 375இல் - பெண் உடன்படாமல் (non-consensual) எந்த வகையிலான உடலுறவு வைத்துக்கொள்வதும் பாலியல் வன்புணர்வு ஆகும். ஆனால் 15 அல்லது அதற்கு மேற்பட்ட வயதுள்ள மனைவியுடன் உறவு வைத்துக்கொள்ளுதல் பாலியல் வன்புணர்வு ஆகாது எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

பிறகு 2013ஆம் ஆண்டு குற்றவியல் திருத்தச் சட்டத்தின்படி உறவுக்கு ஒப்புக்கொள்ளுதலுக்கான வயது வரம்பு 15 லிருந்து 18ஆக உயர்த்தப்பட்டது. இருப்பினும் 15 வயதுடைய அல்லது அதற்கு மேல் உள்ள பெண்ணுடன் உடலுறவு வைத்துக்கொள்வது பாலியல் வன்புணர்வில் சேராது என்ற சட்டம் திருத்தப்படாததால் கணவன் மனைவியுடன் கட்டாய உடலுறவு வைத்துக்கொள்வது பாலியல் வன்புணர்வில் சேரவில்லை.

முன்னதாக செப்டம்பர் 2020ஆம் ஆண்டிலேயே மனுதாரரின் மனைவி வரதட்சணை கொடுமை, கட்டாயப்படுத்தி இயற்கைக்கு மாறாக உறவு வைத்துக்கொள்ளுதல் உள்ளிட்ட பிரிவுகளில் புகார் அளித்திருந்தார்.

இதனையடுத்து கைதுசெய்யப்பட்ட மனுதாரர் உயர் நீதிமன்றத்தில் பிணை கேட்டிருந்தார். மனுதாரர் தரப்பில் வாதாடிய வழக்கறிஞர் கேசரி நாத் திரிபாதி, மனுதாரரின் மனைவி தனது சகோதரர்களுடன் உறவு வைத்துக்கொள்ள மனுதாரர் கட்டாயப்படுத்தவில்லை எனத் தெரிவித்ததாகக் குறிப்பிட்டார்.

இதையடுத்து, குற்றஞ்சாட்டப்பட்டவருக்கு நீதிமன்றம் பிணை வழங்கியது.

இருப்பினும் 2017ஆம் ஆண்டு உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்ற வழக்கு விசாரணை ஒன்றில், 18 வயதுக்கு கீழுள்ள மனைவியுடன் உடலுறவு வைத்துக்கொள்வது பாலியல் வன்புணர்வு எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதையும் படிங்க: குழந்தையைப் பிரசவித்த மறுநாளே கரோனாவால் உயிரிழந்த தலைமைக் காவலர்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.