ETV Bharat / bharat

பள்ளிப் பேருந்து கவிழ்ந்து விபத்து - சுற்றுலா சென்ற மாணவிகளுக்கு நேர்ந்த சோகம் - Manipur news

கல்விச் சுற்றுலா சென்ற தனியார் பள்ளிப் பேருந்து கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 5 மாணவிகள் பரிதாபமாக உயிரிழந்தனர். ஈடுபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணி தொடர்ந்து நடைபெறுவதால் உயிரிழப்பு அதிகரிக்கலாம் என மீட்புக் குழுவினர் தெரிவித்துள்ளனர்.

விபத்து
விபத்து
author img

By

Published : Dec 21, 2022, 6:59 PM IST

இம்பால்: மணிப்பூர் மாநிலம், நானி மாவட்டத்தில், தனியார் பள்ளி மாணவர்கள் ஆண்டு கல்விச் சுற்றுலா சென்றனர். மாணவிகள் பயணித்த பேருந்து லாங்சாய் மலைப்பகுதி அருகே சென்றபோது கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இதில் பேருந்தில் பயணித்த 5 மாணவிகள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 20க்கும் மேற்பட்ட மாணவிகள் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

தொடர் மீட்புப் பணிகள் நடைபெற்று வரும் நிலையில், உயிரிழப்பு அதிகரிக்கலாம் என மீட்புக் குழுவினர் அச்சம் தெரிவித்துள்ளனர். இடிபாடுகளுக்குள் சிக்கி உயிருக்கு போராடிக் கொண்டு இருந்த மாணவிகளை, சக மாணவர்கள் மீட்புக் குழுவினர் மீட்கப் போராடி வருகின்றனர்.

இதையும் படிங்க: தமிழர்களிடம் நூதன முறையில் ரூ.2.67 கோடி அபேஸ்.. டெல்லியில் ரயில்களை எண்ணிய அவலம்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.