ETV Bharat / bharat

ஆந்திராவில் பேருந்து கால்வாயில் கவிழ்ந்து விபத்து - 7 பேர் உயிரிழப்பு - உயிரிழப்பு

ஆந்திர மாநிலம், பிரகாசம் மாவட்டத்தில் திருமண நிகழ்ச்சியில் பங்கேற்கச் சென்றவர்கள் பயணித்த பேருந்து, சாகர் கால்வாயில் கவிழ்ந்து விபத்துக்கு உள்ளான சம்பவத்தில் 7 பேர் உயிரிழந்தனர். பேருந்து ஓட்டுநர், தூக்க கலக்கத்தில் இருந்ததால், இந்த விபத்து நிகழ்ந்ததாக, முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.

ap accident
ஆந்திராவில் பேருந்து கால்வாயில் கவிழ்ந்து விபத்து - 7 பேர் உயிரிழப்பு
author img

By

Published : Jul 11, 2023, 11:58 AM IST

Updated : Jul 11, 2023, 12:49 PM IST

டார்சி: ஆந்திரப் பிரதேச மாநிலம், பிரகாசம் மாவட்டத்தின் டார்சி அருகே, திருமண நிகழ்ச்சியில் பங்கேற்கச் சென்றவர்கள் பயணித்த பேருந்து, திங்கட்கிழமை நள்ளிரவு நேரத்தில், சாகர் கால்வாயில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த பயங்கரமான சாலை விபத்து சம்பவத்தில், 7 பேர் உயிரிழந்தனர்.

இந்தச் சம்பவத்தில் 7 பேர் உயிரிழந்த நிலையில், 12 பேர் காயமடைந்து உள்ளனர். பிரகாசம் மாவட்டத்தில் உள்ள பொதிலி பகுதியில் இருந்து கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் உள்ள காக்கிநாடாவுக்கு பேருந்து சென்று கொண்டிருந்தபோது, இந்த விபத்து நிகழ்ந்து உள்ளது. விபத்தின்போது பேருந்தில் 35 முதல் 40 பேர் இருந்ததாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. விபத்து குறித்த தகவல் அறிந்ததும், போலீசார் உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்து மீட்புப் பணியில் ஈடுபட்டனர்.

திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்காக காக்கிநாடா செல்வதற்காக, அந்தக் குழுவினர், ஆந்திர மாநிலத்தின் போக்குவரத்துக் கழகமான RTC பேருந்தை வாடகைக்கு எடுத்து உள்ளனர். பேருந்து, பிரகாசம் மாவட்டத்தில் உள்ள பொதிலி பகுதியில் இருந்து கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் உள்ள காக்கிநாடா நோக்கிச் சென்று கொண்டு இருந்தது. பேருந்து ஓட்டுநர் தூக்க கலக்கத்தில் இருந்ததாகவும், இதன் காரணமாக, பேருந்து ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து, சாகர் கால்வாயில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதாக, முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.

இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் பெயர்கள் வெளியிடப்பட்டு உள்ளன. பிரகாசம் மாவட்டம், பொதிலி பகுதியைச் சேர்ந்த அப்துல் அஜீஸ் (65), அப்துல் ஹனி (60), ஷேக் ரமீஸ் (48), முல்லா நூர்ஜஹான் (58), முல்லா ஜானி பேகம் (65), ஷேக் ஷபீனா (35), மற்றும் ஷேக் ஹீனா (6) உள்ளிட்டோர், இந்தச் சம்பவத்தில் உயிரிழந்து உள்ளனர். பத்துக்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்து உள்ள நிலையில், அவர்கள் சிகிச்சைக்காக, அருகில் உள்ள மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.

திருமண நிகழ்ச்சிக்காக சென்றவர்கள் பயணித்த பேருந்து விபத்துக்குள்ளான சம்பவத்தில், 7 பேர் உயிரிழந்த சம்பவம், அந்த பகுதியில், பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

மற்றொரு விபத்து: உத்தரப்பிரதேச மாநிலம், காஸியாபாத்தில் உள்ள டெல்லி - மீரட் எக்ஸ்பிரஸ் வே சாலையில், பள்ளிப் பேருந்து மீது, எஸ்யூவி வாகனம் மோதிய விபத்தில், ஒரு பெண் உட்பட 6 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். ஜூலை 11ஆம் தேதி, காலை 6 மணி அளவில், இந்த விபத்து நிகழ்ந்தபோது, அதிர்ஷ்டவசமாக, பேருந்தில் பள்ளிக்குழந்தைகள் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

பேருந்து ஓட்டுநர், சிஎன்ஜி எரிவாயுவை, பேருந்தில் நிரப்பிவிட்டு, தவறான பாதையில், பேருந்தை இயக்கியதே, இந்த விபத்திற்கு காரணம் என, கூடுதல் துணை போக்குவரத்து ஆணையர், ஏஎன்ஐ செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில் குறிப்பிட்டு உள்ளார்.

இதையும் படிங்க: West Bengal Panchayat polls: மேற்கு வங்க பஞ்சாயத்து தேர்தல் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது!

Last Updated : Jul 11, 2023, 12:49 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.