சேபியான் (ஜம்மு காஷ்மீர்): ஜம்மு காஷ்மீர் காவலர்கள் 7 பேரை கைது செய்தனர். இவர்கள் மீது பயங்கரவாதிகளுக்கு பல்வேறு உதவிகள் செய்ததாக குற்றஞ்சாட்டப்படுகிறது.
ஜம்மு காஷ்மீர் மாநிலம் சோபியான் மாவட்டத்தில் ஏழு பேர் கைது செய்யப்பட்டது தொடர்பாக அம்மாநில காவலர்கள் கூறுகையில், “கைது செய்யப்பட்ட ஏழு பேரும் பயங்கரவாதிகளுடன் தொடர்பை ஏற்படுத்திக்கொண்டு அவர்களுக்கு பல்வேறு உதவிகள் செய்துள்ளனர்.
அவர்கள், சமியுல்லா சோபன், ஹிலால் அஹமது வானி, ரமியாஸ் அஹமது வானி, ரூப் அஹமது வானி, ஸாகித் அஹமது வானி, பைசன் அஹமது ராதர் ஆகியோர் ஆகும். இவர்கள் மீமென்தார், தாசிபோரா மற்றும் சோபியான் மாவட்டத்தின் தென்பகுதியை சேர்ந்தவர்கள்.
இவர்களிடமிருந்து மூன்று கையெறிக் குண்டுகள், இரண்டு ஏகே 47 ரக துப்பாக்கிகள் மற்றும் சில கைத்துப்பாக்கிகள் கிடைத்துள்ளன. மேலும் இவர்களுக்கும் பயங்கரவாதிகளுக்கும் இடையே இருந்த தொடர்புகள் குறித்த ஆவணங்களும் கிடைத்துள்ளன” என்றனர்.
இதையும் படிங்க: காஷ்மீர் பயங்கரவாதிகள் மறைவிடத்தில் ஆய்வு: ஆயுதங்கள் மீட்பு!