மும்பை: இந்தியாவின் சீரம் மருந்து நிறுவனம் ஆக்ஸ்போர்ட், அஸ்ட்ராஜெனிகா நிறுவனத்துடன் இணைந்து கரோனா தொற்றுக்கு எதிரான கோவிஷீல்ட் தடுப்பூசியையும், அமெரிக்காவின் நோவாக்ஸ் நிறுவனத்துடன் இணைந்து கோவோவேக்ஸ் தடுப்பூசியையும் தயாரித்தது. இந்த தடுப்பூசிகளுக்கு உலக நாடுகளுக்கு மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. அதோடு பல்வேறு நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டன.
இதைத்தொடர்ந்து ஒமைக்ரான் தொற்று பரவியதையடுத்து அதற்காக தடுப்பூசி தயாரிக்கும் பணிகளும் தொடங்கப்பட்டன. ஆனால் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியாகவில்லை. இந்த நிலையில், மீண்டும் நோவாவேக்ஸ் நிறுவனத்துடன் சேர்ந்து ஒமைக்ரான் தொற்றுக்கு எதிரான தடுப்பூசியை தயாரிக்க உள்ளதாக சீரம் நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து சீரம் நிறுவனத்தின் சிஇஒ ஆதார் பூனாவாலா கூறுகையில், இந்தத் தடுப்பூசி இந்தியாவிலேயே தயாரிக்கப்பட உள்ளது. இந்தாண்டு இறுதிக்குள் சந்தையில் கிடைக்கும். குறிப்பாக ஒமைக்ரான் தொற்றின் BA 5 வகை மாறுபாட்டிற்கு எதிராக சிறப்பாக செயல்படும் என்று தெரிவித்தார்.
இதையும் படிங்க: இன்ட்ராநாசல் தடுப்பூசியின் மூன்றாம் கட்ட பரிசோதனை முடிந்தது