ETV Bharat / bharat

Security Breach: பாதுகாப்பில் மீண்டும் குளறுபடி - பிரதமரை நெருங்கிய நபரால் பரபரப்பு! - Security Breach

Security Breach:பிரதமர் மோடியின் பாதுகாப்பு வளையத்திற்குள் திடீரென மர்மநபர் நுழைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. பாதுகாப்பு அதிகாரிகளை மீறி அந்த நபர் நுழைந்த நிலையில், அவரிடம் இருந்த மாலையை பிரதமர் மோடி பெற்றுக்கொண்டார்.

பிரதமர் மோடி
பிரதமர் மோடி
author img

By

Published : Jan 12, 2023, 6:40 PM IST

Security Breach: பிரதமர் மோடியின் பாதுகாப்பில் குளறுபடி

Security Breach: ஹூப்ளி(கர்நாடகா): பல்வேறு திட்டங்களை தொடங்கி வைக்க பிரதமர் மோடி கர்நாடகா சென்றார். அடுத்த சில மாதங்களில் கர்நாடகா சட்டப்பேரவைக்கு தேர்தல் வரும் நிலையில், முதலமைச்சர் பசவராஜ் பொம்மை தலைமையிலான பா.ஜ.க. அரசு மீண்டும் ஆட்சியை தக்கவைக்க முயன்று வருகிறது.

பல்வேறு கவர்ச்சிகரத் திட்டங்களை கடந்த சில நாட்களாக பசவராஜ் பொம்மை தலைமையிலான அரசு அறிவித்து வருகிறது. இந்நிலையில், தேசிய இளையோர் பெருவிழா உள்பட நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள பிரதமர் மோடி கர்நாடகா சென்றார். ஹூப்ளி நகர சாலை வழியாக பிரதமர் மோடியின் அணிவகுப்பு வாகனம் சென்றது.

ஹூப்ளி சாலையின் இரு புறத்தில் நின்றும் பிரதமர் மோடியை வரவேற்க ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டனர். மக்கள் கூட்டத்தை அடுத்து காரின் பக்கவாட்டில் நின்று, பயணித்தபடி பிரதமர் மோடி அனைவரும் கையசைத்து நன்றி தெரிவித்தார். பிரதமர் மோடியின் மீது பூக்களை வீசி திரளான மக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

பிரதமர் மோடியின் வருகையை முன்னிட்டு ஹூப்ளி நகர சாலை போலீசாரின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டு கண்காணிப்புப் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டன. சாலையின் இருமருங்கிலும் தடுப்புகள் அமைத்து போலீசார் தீவிர பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர். மேலும் பிரதமர் மோடியை சுற்றி எஸ்.பி.ஜி. எனப்படும் சிறப்பு பாதுகாப்பு குழு(Special Protection Group) அதிகாரிகள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.

போலீசாரின் தடுப்புகளை தாண்டிய மர்ம நபர், இவ்வளவு பாதுகாப்பு அம்சங்களையும் மீறி திடீரென பிரதமர் மோடியை நெருங்கினார். இதையடுத்து சிறப்பு பாதுகாப்புக் குழு அதிகாரிகள், மர்ம நபரை பிடித்து விலக்க முயன்றனர். பாதுகாப்பு வளையத்திற்குள் நுழைந்த நபர் பிரதமர் மோடியிடம் மாலை கொடுத்தார். தொண்டரின் அன்பு பொழிந்த மாலையை பிரதமர் மோடி பெற்றுக் கொண்டார். இதையடுத்து அந்த நபரை அங்கிருந்து அதிகாரிகள் அப்புறப்படுத்தினர்.

பிரதமர் மோடியின் பாதுகாப்பு வளையத்திற்குள் மர்ம நபர் திடீரென நுழைந்து பூமாலை வழங்கிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அத்தனை பாதுகாப்பு அதிகாரிகளையும் மீறி பிரதமர் மோடியை மர்ம நபர் நெருங்கிய காட்சி சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருகிறது. மேலும் பாதுகாப்பு வளையத்தை தாண்டிய மர்ம நபர் குறித்து விசாரித்து வருவதாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: ஆளுநர் மீது நடவடிக்கை: குடியரசுத் தலைவரிடம் திமுக பிரதிநிதிகள் கோரிக்கை மனு!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.