பஞ்சாபின் சண்டிகர் செக்டர் 34இல் ஆக்சிஸ் வங்கிக் கிளை செயல்பட்டுவருகிறது. இங்கு மோஹாலி பகுதியைச் சேர்ந்த சுமித் என்பவர், பாதுகாவலராகக் கடந்த மூன்று ஆண்டுகளாகப் பணியாற்றிவருகிறார்.
இவர் நேற்று (ஏப்ரல் 11) ஏடிஎம்களில் பணத்தை நிரப்புவதற்காக வைக்கப்பட்டிருந்த பணப்பெட்டிகளிலிருந்து நான்கு கோடியே நான்கு லட்சம் ரூபாயைத் திருடிவிட்டு தப்பியோடியுள்ளார்.
பாதுகாவலர் பணத்தைத் திருடியிருப்பது சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளதை வங்கி ஊழியர்கள் பார்த்தனர். இது குறித்து காவல் துறைக்குத் தகவல் அளிக்கப்பட்டது.
பணத்துடன் ஒளிந்திருக்கக்கூடிய இடங்களில் காவல் துறையினர் சோதனை நடத்திவருகின்றனர். இது குறித்து வழக்குப்பதிவு செய்து, தலைமறைவாகவுள்ள சமித்தைத் தீவிரமாகத் தேடிவருகின்றனர்.
இதையும் படிங்க: சக்தி வாய்ந்த ஆயுதங்களை உபயோகித்த மியான்மர் ராணுவம்: 80 பேர் உயிரிழப்பு