ETV Bharat / bharat

Opposition parties meeting: பிரதமர் வேட்பாளர் குறித்த அறிவிப்பு வெளியாக வாய்ப்பு?

திமுக, காங்கிரஸ், ஆம் ஆத்மி உள்ளிட்ட 24 எதிர்கட்சிகள் பங்கேற்கும் இரண்டாவது எதிர்கட்சிகள் கூட்டம் கர்நாடக தலைநகர் பெங்களூருவில், நாளை மற்றும் நாளை மறுநாள் நடைபெற உள்ளது.

பெங்களூரு கூட்டத்திற்கு ஆயத்தமாகும் எதிர்கட்சிகள் -  பிரதமர் வேட்பாளர் குறித்த அறிவிப்பு வெளியாக வாய்ப்பு!

author img

By

Published : Jul 16, 2023, 1:22 PM IST

பெங்களூரு (கர்நாடகா): திமுக, காங்கிரஸ், ஆம் ஆத்மி உள்ளிட்ட எதிர்கட்சிகள் பங்கேற்கும் இரண்டாவது கூட்டம், நாளை (ஜூலை 17) மற்றும் நாளை மறுநாள் (ஜூலை 18) ஆகிய தேதிகளில், கர்நாடக மாநிலம் பெங்களூருவில் நடைபெற உள்ள நிலையில், அதற்கான ஏற்பாடுகளை அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் மற்றும் கர்நாடக மாநில காங்கிரஸ் கட்சியின் பொறுப்பாளர் ரந்தீப் சிங் சுர்ஜ்வாலார் ஆகியோர் நேற்று (ஜூலை 15) ஆய்வு செய்தனர்.

2024ஆம் ஆண்டில் நடைபெற உள்ள நாடாளுமன்றத் தேர்தலில், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியை எதிர்க்க காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்கட்சிகள் வலுவான கூட்டணி அமைக்க முயற்சி செய்து வருகிறது. பிரதமர் மோடிக்கு எதிராக அணி திரளும் வகையில், நாட்டில் உள்ள அனைத்து எதிர்கட்சிகளையும் ஒன்றிணைக்கும் முயற்சியில் பிகார் முதலமைச்சர் நிதீஷ் குமார் மற்றும் அம்மாநில துணை முதலமைச்சர் தேஜஸ்வி யாதவ் ஆகியோர் ஈடுபட்டு உள்ளனர்.

இதன் ஒருபகுதியாக, பிகார் தலைநகர் பாட்னாவில் கடந்த ஜூன் 23ஆம் தேதி நடைபெற்ற கூட்டத்தில் திமுக, காங்கிரஸ், ஆம் ஆத்மி, திரிணாமுல் காங்கிரஸ் உள்ளிட்ட 17 கட்சிகள் கலந்து கொண்டன. பாட்னா கூட்டம், பிகார் முதலமைச்சரும், ஐக்கிய ஜனதா தள கட்சித் தலைவருமான நிதீஷ் குமார் தலைமையில் நடைபெற்ற நிலையில், பெங்களூரு கூட்டம் காங்கிரஸ் கட்சித் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே தலைமையில் நடைபெற உள்ளது.

பாட்னா கூட்டத்தில் 17 எதிர்கட்சிகள் பங்கேற்று இருந்த நிலையில், பெங்களூரு கூட்டத்தில் திமுக, காங்கிரஸ், ஆம் ஆத்மி, திரிணாமுல் காங்கிரஸ், ஐக்கிய ஜனதா தளம், தேசியவாத காங்கிரஸ் கட்சி (சரத் பவார் அணி), கேரளா காங்கிரஸ் (எம்), கேரளா காங்கிரஸ் (ஜே), ஆர்எஸ்பி, பார்வார்ட் பிளாக், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, மதிமுக, அகாலி தளம், சமாஜ்வாதி கட்சி உள்ளிட்ட 24 எதிர்கட்சிகள் பங்கேற்க உள்ளன.

இந்த கூட்டத்தில், கர்நாடக முதலமைச்சர் சித்தராமைய்யா, துணை முதலமைச்சர் டி.கே.சிவக்குமாரும் பங்கேற்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. எதிர்கட்சிகளின் இரண்டாவது கூட்டம் முன்னதாக இமாச்சலப்பிரதேச மாநிலம் சிம்லாவில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு இருந்த நிலையில், அது தற்போது பெங்களூருவிற்கு மாற்றப்பட்டு உள்ளது.

இந்த கூட்டத்தில், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களான சோனியா காந்தி, ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி, ராஜஸ்தான் முதலமைச்சர் அசோக் கெலாட், திமுக தலைவரும், தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின், பிகார் முதலமைச்சர் நிதீஷ் குமார், டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால், மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி, தேசியவாத காங்கிரஸ் கட்சி தலைவர் சரத் யாதவ் உள்ளிட்டோர் கலந்து கொள்ள உள்ளனர்.

தேவகவுடா கட்சிக்கு அழைப்பு இல்லை: பாட்னா கூட்டத்தில் பங்கேற்க, முன்னாள் பிரதமர் தேவகவுடா தலைமையிலான மதச்சார்பற்ற ஜனதா தள கட்சிக்கு அழைப்பு விடுக்கப்படாத நிலையில், பெங்களூரு கூட்டத்திற்கும் அழைப்பு விடுக்கப்படவில்லை.

பெங்களூரு செல்லும் ஸ்டாலின்: பெங்களூரு கூட்டத்தில் பங்கேற்பதற்காக முதலமைச்சர் ஸ்டாலின் நாளை காலை பெங்களூரு புறப்பட்டுச் செல்கிறார். சோனியா காந்தி அளிக்கும் விருந்தில் பங்கேற்கும் அவர், எதிர்கட்சிகளின் கூட்டத்தில் பங்கேற்கிறார்.

பாட்னா கூட்டத்தில், பெரிய அளவில் விவாதங்களும் நடைபெறவில்லை. ஒருமித்த கருத்துடன் பிரதமர் வேட்பாளரும் முடிவு செய்யப்படவில்லை. இந்த நிலையில், பெங்களூருவில் நடைபெற உள்ள இரண்டாவது ஆலோசனை கூட்டத்தில் கூட்டணி ஒற்றுமை, பிரச்சார உத்திகள், பிரதமர் வேட்பாளர் குறித்து விரிவாக விவாதிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படிங்க: Manipur violence: மணிப்பூரில் நாகா பழங்குடியின பெண் சுட்டுக்கொலை - 3 லாரிகளுக்கு தீ வைப்பு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.