ஜம்மு & காஷ்மீர் மாநிலத்தில் இரண்டு என்கவுன்ட்டர்களில் நான்கு பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை செய்யப்பட்டனர். ஒருவர் தென் காஷ்மீரிலுள்ள மொலு பகுதியில் பாதுகாப்புப் படையினரால் என்கவுன்ட்டர் செய்யப்பட்டார். மேலும், பயங்கரவாதிகளுடன் தொடர்புள்ள மூன்று பேர் டிராச் பகுதியில் பாதுகாப்புப் படையினரால் என்கவுன்ட்டர் செய்யப்பட்டனர்.
மொலு பகுதியில் பயங்கரவாதிகளின் நடமாட்டம் இருக்கிறது என்ற தகவல் மட்டும் பாதுகாப்புப் படையினருக்குக் கிடைத்ததும் அங்கு அவர்களுக்கும் பயங்கரவாதிகளுக்குமிடையே துப்பாக்கிச்சண்டை நடைபெற்றது.
இதுகுறித்து அப்பகுதின் காவல்துறையினர் தனது ட்விட்டர் பக்கத்தில், ' ''JeM' பயங்கரவாத அமைப்புடன் தொடர்புடைய மூன்று உள்ளூர் பயங்கரவாதிகள் என்கவுன்ட்டரில் சுட்டுக்கொல்லப்பட்டனர். மொலுவில் இரண்டாவது என்கவுன்ட்டர் நடைபெற்றுக்கொண்டு இருக்கிறது. ஏனைய தகவல்களை ஏடிஜிபி தெரிவிப்பார்' எனப் பதிவிட்டனர்.
இதனைத்தொடர்ந்து, ஏடிஜிபி விஜய்குமார் கூறுகையில், 'டிராச் பகுதியில் கொல்லப்பட்ட மூன்று பயங்கரவாதிகளில் இருவர் ஹனன் பின் யகூப் மற்றும் ஜம்ஷெட் என்பதும், இவர்கள் கடந்த அக்.2 புல்வாமாவில் நடந்த சிறப்பு காவல்துறை அலுவலர் ஜாவேத் தர் கொலையிலும், செப்.24இல் நடந்த மேற்கு வங்க கூழித்தொழிலாளி கொலை வழக்கில் தொடர்புடையதும் தெரியவந்துள்ளது' எனத் தெரிவித்தார்.
தொடர்ச்சியாக பல்வேறு என்கவுன்ட்டர் சம்பவங்கள் பயங்கரவாதிகளுக்கும் பாதுகாப்புப் படையினருக்குமிடையே ஜம்மு & காஷ்மீரில் கடந்த சில நாட்களாக நடந்து வருகிறது என்பது குறிப்படத்தக்கது.
இதையும் படிங்க: உத்தரகாண்டில் பேருந்து பள்ளத்தாக்கில் கவிழ்ந்ததில் 25 பேர் உயிரிழப்பு