ETV Bharat / bharat

செபியின் தணிக்கைக்கு பின் ட்ரீ ஹவுஸ் கல்வி நிறுவனத்திற்கு க்ளீன் சீட்..! - செபி

ட்ரீ ஹவுஸ் கல்வி நிறுவனத்திற்குச் செபி (இந்தியப் பங்கு மற்றும் பரிவர்த்தனை வாரியம் ) அனுப்பிய கடிதத்தில், இதுவரை நடந்த தடயவியல் தணிக்கையில் நிதிக் குறைபாடுகள் எதுவும் இல்லாததால், நிறுவனத்தின் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படக் கூடாது என விளம்பரதாரர்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.

Etv Bharat
Etv Bharat
author img

By

Published : Oct 23, 2022, 4:48 PM IST

டெல்லி: ஆறு வருட நீண்ட தணிக்கைக்குப் பின்னர் செபி நிறுவனம், ட்ரீ ஹவுஸ் கல்வி நிறுவனத்திற்கு க்ளீன் சீட் வழங்கியுள்ளது. அந்நிறுவனத்தின் விளம்பரதாரர்கள் நிறுவனத்தின் நிதியில் தவறான அறிக்கைகள் வழங்கியது தொடர்பான வழக்கில் செபியின் கார்ப்பரேட் நிதி புலனாய்வுத் துறை மற்றும் ஒழுங்குமுறை அதிகாரியால் தணிக்கை தொடங்கப்பட்டது.

அதில் நிறுவனத்தில் நிதிக் குறைபாடுகள் எதுவும் ஏற்படாததால், நிறுவனத்தின் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாது என அக்டோபர் 19 அன்று அந்நிறுவனத்தின் விளம்பரதாரர்களுக்குக் கடிதம் அனுப்பியுள்ளது.

கடந்த 2016 ஆம் ஆண்டு ட்ரீ ஹவுஸ் கல்வி நிறுவனத்தின் மீதான குற்றச்சாட்டுகளைத் தொடர்ந்து, செபி ஏப்ரல் 2011 முதல் ஜூன் 2017 வரை விசாரணையைத் தொடங்கியது. அதன் பிறகு, 2018 இல் செபி இடைக்கால உத்தரவில், ட்ரீ ஹவுஸ் நிறுவனத்தின் விளம்பரதாரர்களான ராஜேஷ் பாட்டியா, கீதா பாட்டியா, கிரிதரிலால் எஸ் பாட்டியா மற்றும் அதன் மற்ற இரண்டு அதிகாரிகள் பத்திரச் சந்தையை அணுகுவது மற்றும் நிறுவனத்தின் நிதியத்தின் தொடர்பான விஷயத்தில் தவறான அறிக்கைகள் கையாளுவதாகக் குற்றம் சாட்டப்பட்டது.

இதனையடுத்து ட்ரீ ஹவுஸின் கணக்கு வழக்கு குறித்த விரிவான தடயவியல் தணிக்கையை நடத்த ஒரு தணிக்கையாளர் அல்லது தணிக்கை நிறுவனத்தை நியமிக்குமாறு கட்டுப்பாட்டாளர்க்கு உத்தரவிடப்பட்டது. ட்ரீ ஹவுஸின் நிதி மற்றும் வணிகச் செயல்பாடுகள் உட்படக் கணக்குப் புத்தகங்களில் கையாளுதல் மற்றும் தவறான செயல்பாடுகளைச் சரிபார்க்கத் தணிக்கையாளர் நியமனம் செய்யப்பட்டார்.

இந்நிலையில் ஆறு வருடங்களுக்குப் பின்னர் தற்போது அந்நிறுவனத்தின் மீதான குற்றத்திற்கு க்ளீன் சீட் வழங்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க:பங்குச்சந்தை இளம் முதலீட்டாளரா நீங்கள்? பொருளாதார நிபுணர்கள் எச்சரிக்கை..!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.