ETV Bharat / bharat

ஐந்து ஆண்டுகளாக வயிற்றில் இருந்த கத்தரிக்கோல்; முடிவுக்கு வந்த பெண்ணின் போராட்டம்! - பிரசவ அறுவை சிகிச்சை

Scissors stuck in stomach case: கேரளாவில் பிரசவத்தின் போது வயிற்றில் கத்தரிக்கோலை வைத்துத் தைக்கப்பட்ட சம்பவத்தில் பாதிக்கப்பட்ட ஹர்ஷினா நடத்தி வந்த சத்தியாகிரக போராட்டம், குற்றம்சாட்டப்பட்டவர்களின் மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்ட நிலையில் முடிவுக்கு வந்துள்ளது.

Scissors stuck in stomach case in kerala Harshina ends protest after submitting chargesheet

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 2, 2023, 9:04 PM IST

கோழிக்கோடு (கேரளா): கோழிக்கோட்டில் அரசுக்கு எதிராக 104 நாட்களாக சத்தியாகிரக போராட்டம் நடத்திவந்த ஹர்ஷினா, அந்த சம்பவத்தில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்ட நிலையில் அவரது போராட்டத்தை முடித்துக் கொண்டார்.

கேரளாவில் ஹர்ஷினா என்பவர் கோழிக்கோடு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் 2017 ஆம் ஆண்டு பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்டிருந்தார். அவருக்குப் பிரசவ அறுவை சிகிச்சையின் போது வயிற்றில் கத்தரிக்கோல் வைத்துத் தைக்கப்பட்டு இருந்தது. 2017 ஆம் ஆண்டின் பிற்பகுதியில் நடந்த சம்பவத்தால் ஹர்ஷினா ஐந்து வருடங்கள் வயிற்றில் கத்தரிக்கோலுடன் வாழ வேண்டியிருந்தது.

இந்நிலையில் கடந்த மே 22ஆம் தேதி கோழிக்கோடு மருத்துவக் கல்லூரி முன்பு ஹர்ஷினா காலவரையற்ற சத்தியாகிரக போராட்டத்தைத் தொடங்கினார். அரசியல் பிரமுகர்கள், சமூக ஆர்வலர்கள் என பல தரப்புகளில் இருந்தும் ஹர்ஷினாவின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தனர். 100வது நாள் போராட்டத்தை பழம்பெரும் மலையாள நடிகரும், இயக்குநருமான ஜாய் மேத்யூ திருவோண நாளில் (கேரள பிராந்திய அறுவடை திருவிழா நாள்) தொடங்கி வைத்தார்.

இதையும் படிங்க: "ரமோன் மகசேசே" விருது பெற்ற புற்றுநோயியல் நிபுணர் டாக்டர் ரவி கண்ணனுக்கு எம்.பி கனிமொழி வாழ்த்து!

இந்த சம்பவத்தில் குற்றம் சாட்டப்பட்டவர்கள், உதவி ஆணையர் (ஏசிபி) கே.சுதர்சன் முன் விசாரணைக்கு ஆஜராகுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டு இருந்தனர். மேலும், குற்றம் சாட்டப்பட்டவர்களை மேற்கொண்டு விசாரிக்க வேண்டும் என்று உதவி ஆணையர் செய்தியாளர்களிடம் தெரிவித்து இருந்தார்.

மாஞ்சேரி மருத்துவக் கல்லூரியின் உதவிப் பேராசிரியர் டாக்டர். ரமேசன் சி.கே., தற்போது கோட்டயத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் பணிபுரியும் டாக்டர். ஷஹானா.எம் மற்றும் கோழிக்கோடு மருத்துவக் கல்லூரியின் மகப்பேறு பராமரிப்பு மையத்தில் பணிபுரியும் செவிலியர்களான ரஹானா.எம், மஞ்சு.கே.ஜி. ஆகியோர் மீது இந்த சம்பவத்தில் குற்றம்சாட்டப்பட்டு இருந்தனர்.

குற்றம் சாட்டப்பட்டுள்ள இவர்கள் அனைவரும் கோழிக்கோடு மருத்துவக் கல்லூரியில் ஹர்ஷினாவின் 3வது பிரசவத்திற்கு அறுவை சிகிச்சை செய்த குழுவில் இடம்பெற்றிருந்தனர். இந்நிலையில் போலீசார் குற்றம்சாட்டப்பட்டவர்கள் மீது மருத்துவ அலட்சியச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து, குற்றவாளிகளின் வாக்குமூலத்தைப் பதிவு செய்து கைது செய்தனர். இந்த சம்பவத்தில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீதுள்ள குற்றச்சாட்டுகள் படி அவர்களுக்கு இரண்டு ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படும் எனக் கூறப்படுகிறது.

இதையும் படிங்க: பழங்குடியின பெண்ணை தாக்கி நிர்வாண ஊர்வலம்; தேசிய மகளிர் ஆணையம் கண்டனம்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.