ETV Bharat / bharat

அறிவியலை பிராந்திய மொழிகளில் வளர்க்க நடந்த ஒரு நாள் பயிற்சிப்பட்டறை!

அறிவியலை பிராந்திய மொழிகளில் வளர்க்க, விக்யான் பிரசார் அமைப்பு சார்பாக ஒரு நாள் பயிற்சிப்பட்டறை டெல்லியில் நேற்று நடந்துள்ளது.

Science Communication, Popularisation and Extension

author img

By

Published : Oct 21, 2021, 8:43 PM IST

விக்யான் பிரசார் அமைப்பின் விக்யான் பாஷா திட்டமானது, இந்திய மொழிகளில் அறிவியல் தகவல் தொடர்பு, அறிவியலை மக்களிடம் பிரபலப்படுத்துதல், அதனை விரிவுபடுத்துதல் ((Science Communication, Popularisation and Extension - (SCoPE)) எனும் திட்டத்தின் மூலம் இதுவரையான செயல்பாடுகளை ஆய்வு செய்யவும், மேற்கொண்டு திட்டமிடவும் டெல்லி இந்தியப் பன்னாட்டு மையத்தில், ஒரு நாள் பயிற்சிப் பட்டறையை விக்யான் பிரசார் அமைப்பு சார்பாக நேற்று (அக்.20) நடத்தியது.

இந்த SCoPE திட்டத்தின் கீழ், பல்வேறு மொழிகளில் செயலாற்றி வரும் பங்கேற்பாளர்கள் நாடு முழுவதுமிருந்து இந்த ஒரு நாள் கூட்டத்தில் கலந்துகொள்கின்றனர்.

இவர்களுடன் இந்தி, ஆங்கிலம், உருது, காஷ்மீரி, டோக்ரி, பஞ்சாபி, குஜராத்தி, மராத்தி, கன்னடம், தமிழ், தெலுங்கு, வங்காளி, அஸ்ஸாமி, மைதிலி, நேபாளி ஆகிய 50 ஸ்கோப் (SCoPE)) நிபுணர்கள் கூட்டத்தில் கலந்துகொண்டனர்.

"சமூகத்தின் அனைத்து நிலைகளிலும் அறிவியல் தகவல் தொடர்பையும், அறிவியலை பிரபலமடையச் செய்வதையும் திறம்படவும், விரைவாகவும் செயல்படுத்துவதை உறுதி செய்வதற்கான முதல் படி என்பது, அவரவரின் தாய்மொழியின் துணையுடன் அறிவியலை தொடர்புபடுத்துவதே ஆகும்.

இதனால் தான் ஊடகங்களுக்கான எங்களது தயாரிப்புகள் அனைத்தையும் இந்திய மொழிகளில் வடிவமைத்து, மேம்படுத்தி உருவாக்க வேண்டும் என்று நாங்கள் தெரிவு செய்தோம்''என்கிறார், இந்நிகழ்வில் கலந்துகொண்டு பேசிய விக்யான் பிரசார் அமைப்பின் இயக்குநர் டாக்டர். நகுல் பராசர்.

"காட்சி ஊடகங்கள் பெருகிவிட்டதால், யாரும் இனி அதிகமாக எழுதமாட்டார்கள். எழுத்துப் படைப்புகள் அழிந்துபோய்விடும் என்றும் சிலர் முன்னறிவிப்பு செய்தனர். இருப்பினும், வளர்ந்து வரும் சமூக ஊடகத் தகவல் தொடர்புகளில் வாட்ஸ்அப் முதல் ட்விட்டர் வரை எழுத்துக்கள் மறுமலர்ச்சி கண்டுவருகின்றன.

தகவல்களை நன்றாகப் புரிந்துகொள்வதற்கு தாய்மொழி வழி உரையாடல்கள் அவசியம்; அரசு மற்றும் அரசு சாரா அமைப்புகள் பலவற்றையும் ஒன்று திரட்டி அறிவியல் தகவல்களை இந்திய மொழிகளில் உருவாக்குவதற்கு விக்யான் பாஷா திட்டம் தேசிய அளவிலான முயற்சியை மேற்கொண்டு வருகிறது'' என்று ஸ்கோப் திட்டத்தின் இந்திய மொழிகளுக்கான தேசிய ஒருங்கிணைப்பாளருமான டாக்டர். டி. வி. வெங்கடேஸ்வரன் தெரிவித்தார்.

இந்தக் கருத்தரங்கில் பகிரப்பட்ட முக்கிய சில விஷயங்கள்

கோவிட் நோய்ப்பரவல் பற்றிய தகவல் தொடர்பின் போது, குறிப்பாக தடுப்பூசி செலுத்திக் கொள்வதில் தென்பட்ட தயக்கம் தொடர்பான சிக்கலைத் தீர்ப்பதில் ஸ்கோப் திட்டத்தின் முன்னணிச் செயல்பாடுகளின் பங்களிப்பு, அறிவியல் குழுக்களைத் தொடங்கி நடத்துதல், பிற இலக்கிய வடிவங்களான திரைப்படம், கவிதைகள், ஆவணப்படக் காட்சிகள் மூலமும் அறிவியல் தகவல்களைப் பகிரச் செய்தல், சமூக ஊடகத் தளங்களின் மூலம் அறிவியல் தகவல் பரவலைப் பல்வேறு இந்திய மொழிகளில் விரிவுபடுத்துவது ஆகியப் பணிகள் குறித்தும் இந்த ஒரு நாள் பயிற்சிப்பட்டறையில் விவாதிக்கப்பட்டது.

இதையும் படிங்க: "இல்லம் தேடிக் கல்வித் திட்டத்தை செயல்படுத்துவது சவாலாக இருக்கும"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.