புதுச்சேரி: கரோனா காரணமாக பள்ளிகள், கல்லூரிகள் மூடப்பட்டு ஆன்லைன் மூலமாகவே பாடங்கள் நடந்த நிலையில், தற்போது தொற்று குறைந்துள்ளது.
இதனையடுத்து முதல்கட்டமாக, பள்ளிகளில் 9ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்புவரையும், கல்லூரிகளும் இன்று முதல் (செப். 1) செயல்படுகின்றன.
மேலும், மாணவர்களுக்கு பல்வேறு வழிகாட்டு நெறிமுறைகளும் அறிவிக்கப்பட்டன. பள்ளிகள், கல்லூரிகள் திறக்கப்பட்டதால், அங்கு கிருமிநாசினி கொண்டு சுத்தம் செய்யப்பட்டது.
சுழற்சி முறையில்..
பள்ளி வகுப்பறைகள், பள்ளிகளின் சுற்றுப்புறங்கள், மைதானங்கள், பள்ளியில் உள்ள மேசை, நாற்காலிகள் என அனைத்தையும் பணியாளர்கள் ஏற்கெனவே சுத்தம் செய்தனர். பல மாதங்களுக்குப் பிறகு இன்று முதல் பள்ளிகள், கல்லூரிகள் திறக்கப்பட்டதால், மாணவர்கள் மகிழ்ச்சியுடனும், தங்களின் நண்பர்களை நீண்ட நாள்களுக்குப் பின்னர் காண்கின்ற ஆவலுடனும் சென்றனர்.
காலை 9 மணி முதல் மாலை 3 மணிவரை பள்ளிகள் செயல்படும். அதாவது திங்கள், புதன், வெள்ளிக்கிழமைகளில் பாதி மாணவர்களும், செவ்வாய், வியாழன், சனிக்கிழமைகளில் மற்ற மாணவர்களும் என சூழற்சி முறையில் பள்ளிகள், கல்லூரிகள் செயல்படுகின்றன.
இதையும் படிங்க: 'பொதுத்தேர்வு வினாத்தாள் முறையில் மாற்றம் இல்லை - அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி'