புதுச்சேரி: கரோனா பரவல் காரணமாகத் தமிழ்நாடு, புதுச்சேரியில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது. இதனையடுத்து, தமிழ்நாட்டில் பிப்ரவரி ஒன்றாம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்பட்டன.
இந்நிலையில், புதுச்சேரியில் பிப்ரவரி நான்காம் தேதிமுதல் பள்ளிகள் திறக்கப்படும் எனக் கல்வித் துறை அமைச்சர் நமச்சிவாயம் அறிவித்திருந்தார். அதன்படி இன்றுமுதல் புதுச்சேரியில் ஒன்றாம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டன.
கரோனா வழிகாட்டு நெறிமுறைகள் அடிப்படையில் முகக்கவசம் அணிதல், உடல் வெப்ப அளவை கண்காணித்தல், தடுப்பூசி செலுத்திக்கொண்டதை உறுதிப்படுத்துதல், தகுந்த இடைவெளியைக் கடைப்பிடித்தல் என அனைத்தும் பின்பற்ற வேண்டுமெனப் பள்ளிகளுக்கு கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.
இதையும் படிங்க: PG Neet 2022: முதுநிலை நீட் தேர்வு 8 வாரங்களுக்குத் தள்ளிவைப்பு