டெல்லி: தனியார் தொலைக்காட்சி தலைமை செய்தியாளர் அர்னாப் கோஸ்வாமி, நவம்பர் 4ஆம் தேதி மும்பை போலீசாரால் கைது செய்யப்பட்டார். 2019ஆம் ஆண்டு உள்அலங்கார வடிவமைப்பாளர் ஒருவர் தற்கொலை செய்துக்கொண்ட வழக்கில் அவரை காவலர்கள் கைது செய்தனர்.
இந்நிலையில் அர்னாப் கோஸ்வாமி சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவருக்கு 14 நாள்கள் நீதிமன்ற காவல் வழங்கி நீதிபதி உத்தரவிட்டுள்ளார். இந்நிலையில் உச்ச நீதிமன்றத்தில் அர்னாப் கோஸ்வாமி சம்பவத்தன்று போலீசார் தனது வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்து தன்னையும், மனைவி, குழந்தை, மாமியார், மாமனார் உள்ளிட்டோரை தாக்கினார்கள் எனத் உச்ச நீதிமன்றத்தில் மனு அளித்துள்ளார்.
இந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நாளை (நவ11) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட உள்ளது. முன்னதாக அர்னாப் கோஸ்வாமி மும்பை உயர் நீதிமன்றத்தில் இடைக்கால நிவாரணம் (பிணை) அளிக்க வேண்டியிருந்தார்.
ஆனால் அவரின் கோரிக்கையை நீதிபதி மறுத்துவிட்டார். இந்நிலையில் உச்ச நீதிமன்றத்தில், அர்னாப் கோஸ்வாமி மனு நாளை விசாரணைக்கு வருகிறது.