ETV Bharat / bharat

கரோனா விதிகளை மீறியவர்கள் மீது கடும் நடவடிக்கைக் கோரி மனு - கடும் நடவடிக்கைக் கோரி மனு

டெல்லி: கரோனா வழிகாட்டுதல்களை கடுமையாக அமல்படுத்தவும், கரோனா விதிகளை மீறியவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவும் கோரி வழக்கறிஞர் ஒருவர் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.

SC
SC
author img

By

Published : May 10, 2021, 3:16 PM IST

கடந்த ஏப்ரல் 16ஆம் தேதி வழக்கறிஞர் பதக் டெல்லி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். அதில், சட்டப்பேரவை தேர்தல் பணிகளுக்காக கரோனா விதிமுறைகளை மீறிய மாநிலங்கள் மற்றும் கும்பமேளா நடத்திய உத்தரகாண்ட் மாநிலம் மீது நடவடிக்கை எடுக்கக் கோரியிருந்தார்.

அந்த மனுவில்,’ஏப்ரல் 16ஆம் தேதியன்று, 2 லட்சத்துக்கும் மேற்பட்டோர் புதியதாக கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்தது. பல மாநிலங்களில் சுகாதார உள்கட்டமைப்பு மோசமடைந்துள்ளது. மருத்துவமனைகள், தகன மேடைகளில் இடமில்லை. அத்தியாவசிய மருந்துகளின் பற்றாக்குறை பல நகரங்களில் பதிவாகியுள்ளது.

கேரளா, புதுச்சேரி, தமிழ்நாடு, அசாம் மற்றும் மேற்கு வங்க மாநிலத்தில் சட்டப்பேரவை தேர்தல்கள் நடைபெற்றன. அங்கு நடந்த தேர்தல் பேரணி, பரப்புரையில் கரோனா விதிகள் பின்பற்றப்படவில்லை. மத்திய உள்துறை அமைச்சர், தேர்தல் நடந்த மாநிலங்களின் முதலமைச்சர்கள் மற்றும் ஏராளமான நட்சத்திர பரப்புரையாளர்கள் கரோனா விதிமுறைகளை மீறியுள்ளனர்’எனக் குறிப்பிட்டிருந்தார்.

மேலும், சாமானிய மக்களின் கவனக்குறைவால்தான் கரோனா பரவல் அதிகரித்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் குற்றஞ்சாட்டியதை தனது மனுவில் சுட்டிக்காட்டிய பதக்,’தெருக்களில் வசிக்கும் ஏழை மக்கள் காவல் துறையினரால் கொடூரமாக தாக்கப்படுகின்றனர்.

ஆனால் அதே சமயம் அதே அலுவலர்கள் கும்பமேளா போன்ற நிகழ்ச்சிகளை தடுக்காமல் அதற்கு அனுமதியளிப்பதுடன், வசதிகளையும் செய்து கொடுக்கின்றனர். இதிலிருந்து இந்திய குடிமக்களை நடத்துவதில் அலுவலர்கள் இரண்டு தனித்தனி மற்றும் பரஸ்பர முரண்பாடான தரங்களை பின்பற்றுகிறார்கள் என்பது தெளிவாகத் தெரிகிறது’ என பதக் தனது மனுவில் தெரிவித்தார்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.