புதுடெல்லி: பஞ்சாப் காங்கிரஸ் முன்னாள் மாநிலத் தலைவர் நவ்ஜோத் சிங் சித்து தொடர்புடைய 1987ஆம் ஆண்டு நிகழ்ந்த சாலை விபத்தில் நீதிமன்றம் அவருக்கு சிறைத் தண்டனை விதித்தது.
இந்தத் தண்டனையை ரத்து செய்யக் கோரி நவ்ஜோத் சிங் சித்து உச்ச நீதிமன்றத்தில் முறையிட்டிருந்தார். இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம் நவ்ஜோத் சிங் சித்துவுக்கு ஓராண்டு சிறைத் தண்டனையை உறுதி செய்து தீர்ப்பளித்துள்ளது.
சாலை விபத்து வழக்கில் கிட்டத்தட்ட 34 ஆண்டுகளுக்கு பின்னர் நவ்ஜோத் சிங் சித்துவுக்கு தண்டனை வழங்கப்பட்டுள்ளது. முன்னாள் கிரிக்கெட் வீரரான நவ்ஜோத் சிங் சித்து முதலில் பாஜகவில் இணைந்து பிரபலமானார்.
அக்கட்சி சார்பில் எம்எல்ஏ ஆக தேர்ந்தெடுக்கப்பட்டார். எனினும் அவருக்கு உரிய பிரதிநிதித்துவம் கொடுக்கப்படவில்லை எனக் கூறி பாஜகவில் இருந்து விலகி காங்கிரஸில் இணைந்தார்.
அவருக்கு மாநில தலைவர் பதவி வழங்கப்பட்டது. அப்போது அவருக்கும் அப்போதைய காங்கிரஸ் முதலமைச்சர் கேப்டன் அமரீந்தர் சிங்குக்கும் இடையே பனிப்போர் ஏற்பட்டது. இதையடுத்து கேப்டன் அமரீந்தர் முதலமைச்சர் பொறுப்பை துறந்தார்.
முன்னதாக இந்த வழக்கில் பஞ்சாப், ஹரியானா நீதிமன்றம் நவ்ஜோத் சிங் சித்துவுக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தது. இந்தத் தீர்ப்பை எதிர்த்து சித்து உச்ச நீதிமன்றத்தில் மறுஆய்வு மனுவை தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில் இன்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
இதையும் படிங்க: மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு; நவ்ஜோத் சிங் சித்து