ETV Bharat / bharat

அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு எதிரான மனு; அவசர வழக்காக ஏற்க முடியாது என உச்ச நீதிமன்றம் அறிவிப்பு! - Delhi news

Sanatan Dharma: செப்டம்பர் 2ஆம் தேதி நடைபெற்ற சனாதன ஒழிப்பு மாநாட்டில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் பேச்சுக்கு எதிராக மத்திய உள்துறை செயலாளர், சிபிஐ விசாரணை செய்ய உத்தரவிடக் கோரி உச்ச நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

plea-in-sc-seeks-fir-against-u-stalin-cbi-probe-into-meeting-titled-sanatan-dharma-eradication-conference
"சனாதன தர்மம் ஒழிப்பு மாநாடு" உதயநிதி மீது சிபிஜ விசாரணை கோரி உச்ச நீதிமன்றத்தில் மனு
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 15, 2023, 5:11 PM IST

டெல்லி: கடந்த செப்டம்பர் 2ஆம் தேதி சென்னையில் நடைபெற்ற சனாதன ஒழிப்பு மாநாட்டில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் பேச்சுக்கு எதிராக மத்திய உள்துறை செயலாளர், சிபிஐ விசாரணை செய்ய உத்தரவிடவும் மற்றும் இனி வரும் காலங்களில் சனாதன தர்மம் குறித்து உதயநிதி ஸ்டாலின், பீட்டர் அல்போனஸ், ஆ.ராசா மற்றும் திருமாவளவன் ஆகியார் பேச இடைக்கால தடை விதிக்க வேண்டும் எனவும் சென்னை உயர் நீதிமன்றத்தைச் சேர்ந்த வழக்கறிஞர் உச்ச நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளார்.

ஜெகநாத் என்பவர் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், செப்டம்பர் 2ஆம் தேதி நடைபெற்ற சனாதன ஒழிப்பு மாநாட்டில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் பேச்சு அரசியலமைப்புச் சட்டம் 25 மற்றும் 26 விதிகளை மீறுவதாக உள்ளது. மேலும், ஹிஜாப் வழக்கை போல் சனாதன தர்மம் குறித்து தமிழ்நாடு உயர்கல்வித் துறை மற்றும் பள்ளிகளில் எந்த கூட்டமும் நடத்தக் கூடாது எனவும், சனாதன தர்மம் என்ற தலைப்பில் மாநாடு நடத்த காவல் துறை அனுமதி வழங்கியது எப்படி என்றும், அதற்கு காரணமான குற்றவாளிகள் மற்றும் அமைப்பு மீது ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என்பது குறித்து தமிழ்நாடு காவல் துறை தலைவர் அறிக்கை சமர்ப்பிக்க உத்தரவிட வேண்டும் என மனுவில் கூறியிருந்தார்.

இதையும் படிங்க: மகளிர் உரிமைத் தொகை திட்டம்; காஞ்சிபுரத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் துவங்கி வைத்தார்!

மேலும், 2018ஆம் ஆண்டு உச்ச நீதிமன்ற தீர்ப்பின்படி வெறுப்பு பேச்சுக்கு எதிராக நோடல் அதிகாரியை உடனடியாக நியமிக்க வேண்டும் என்ற உத்தரவின் பேரில், சனாதன ஒழிப்பு மாநாடு குறித்து தமிழ்நாடு உள்துறை செயலாளர் மற்றும் தமிழ்நாடு காவல் துறைத் தலைவர் உடனடியாக நோடல் அதிகாரியை நியமித்து விசாரணையைத் தொடங்க வேண்டும் என மனுவில் கூறியிருந்தார்.

குறிப்பிட்ட மதத்தைப் பற்றி பேசுவதற்கு காவல் துறையினர் எவ்வாறு அனுமதி அளித்தனர் என்பது தெரியவில்லை என்றும், மேலும் இது போன்ற மாநாட்டுக்கு அனுமதி வழங்கியதில் காவல் துறையினருக்கு ஏதேனும் அரசியல் அழுத்தம் இருந்ததா என்பதையும் தெரிவிக்க வேண்டும். அதேபோல், சனாதன ஒழிப்பு மாநாடு ஏற்பாடு செய்தவர்கள் தற்போது வரை கைது செய்யப்படவில்லை எனவும் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த மனு அவசர வழக்காக எடுக்கக் கோரி மனுதாரர் சார்பாக வழக்கறிஞர் தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான அமர்வு முன்பு முறையீடு செய்தார். அப்போது தலைமை நீதிபதி அமர்வு நீதிமன்றத்திற்கு என நிலையான இயக்க முறை உள்ளது, அதை அனைவரும் பின்பற்ற வேண்டும் என கூறி வழக்கை பட்டியலிட உத்தரவிட்டார்.

இதையும் படிங்க: இந்து தர்மத்திற்கு எதிரான கருத்துக்களால் திமுக செல்வாக்கை இழந்து கொண்டிருக்கிறது- அர்ஜூன் சம்பத்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.