ETV Bharat / bharat

பில்கிஸ் பானு வழக்கு... மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க உத்தரவு... - 11 குற்றவாளிகள் விடுதலை

பில்கிஸ் பானு பாலியல் வன்கொடுமை குற்றவாளிகளுக்கு தண்டனை குறைப்பு செய்ததை எதிர்த்த வழக்கில், மத்திய அரசும், குஜராத் அரசும் பதிலளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Bilkis
Bilkis
author img

By

Published : Aug 25, 2022, 4:38 PM IST

டெல்லி: குஜராத் மாநிலத்தில் கடந்த 2002ஆம் ஆண்டு நடந்த கோத்ரா கலவரத்தின்போது, 21 வயதான கர்ப்பிணியான பில்கிஸ் பானு, கூட்டுப்பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார். அவரது குடும்பத்தைச் சேர்ந்த 7 பேர் கொலை செய்யப்பட்டனர்.

இந்த வழக்கில் 11 பேருக்கு ஆயுள் தண்டனை வழங்கப்பட்டது. கடந்த 15 ஆண்டுகளாக சிறையில் இருந்த அவர்களை, கருணை அடிப்படையில் குஜராத் அரசு விடுவித்தது. இவர்கள் 11 பேரும் சுதந்திர தினத்தன்று(ஆக.15) விடுதலையாகினர். குஜராத் அரசின் இந்த நடவடிக்கைக்குப் பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்தனர்.

இதனிடையே தண்டனைக் குறைப்பு கொள்கையின்கீழ் குஜராத் அரசு 11 பேரையும் முன்கூட்டியே விடுதலை செய்ததை எதிர்த்து, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பிரமுகர் சுபாஷினி அலி, பத்திரிகையாளர் ரேவதி உள்ளிட்ட மூன்று பேர் உச்ச நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தனர்.

இந்த மனு இன்று உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி. ரமணா தலைமையிலான அமர்வில் விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதிகள், மத்திய அரசும், குஜராத் அரசும் பதிலளிக்க உத்தரவிட்டனர்.

இதையும் படிங்க: அவர்கள் பிராமணர்கள்... பில்கிஸ் பானு வழக்கில் விடுதலையானவர்களை ஆதரிக்கும் பாஜக எம்எல்ஏ

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.