டெல்லி: 2019ஆம் ஆண்டு ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த பகுஜன் சமாஜ்வாதி கட்சி எம்எல்ஏக்கள் 6 பேர் காங்கிரசில் இணைந்தனர். இதற்கு அம்மாநில சட்டப்பேரவை சபாநாயகர் சி.பி. ஜோஷி அனுமதியளித்தார். இதனை எதிர்த்து பகுஜன் சமாஜ்வாதி, பாஜக கட்சிகள் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் இரு தனித்தனி வழக்குகள் தொடரப்பட்டன.
இது தொடர்பான விசாரணையின்போது, பகுஜன் சமாஜ்வாதி கட்சி எம்எல்ஏக்கள் காங்கிரசில் இணைவதற்கு அனுமதி வழங்க சபாநாயகருக்கு உரிமை கிடையாது என பகுஜன் கட்சி தரப்பு வழக்குரைஞர் வாதிட்டார்.
இந்நிலையில், இது தொடர்பாக ராஜஸ்தான் சபாநாயகர், சம்பந்தப்பட்ட ஆறு எம்எல்ஏக்களுக்கு நோட்டீஸ் அனுப்ப உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இதையும் படிங்க: துப்பாக்கிச்சுடுதல் வீரர்களுக்கு ஹைடெக் விடுதி: அமைச்சர் திறந்துவைப்பு!