ETV Bharat / bharat

விநாயகர் சிலை விற்பனை விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் அதிரடி.. தலைமை நீதிபதி கூறியது என்ன?

Plaster of Paris vinayakar idols prohibited: பிளாஸ்டர் ஆப் பாரீல் ரசாயனத்தால் தயாரிக்கப்பட்ட விநாயகர் சிலைகள் விற்பனைக்கு சென்னை உயர்நீதிமன்றம் விதித்த தடை உத்தரவில் தலையிட முடியது என உச்ச நீதிமன்றம் தெரிவித்தது.

court will not interfere with the Madras High Court order
சென்னை உயர் நீதிமன்ற உத்தரவில் உச்ச நீதிமன்றம் தலையிடாது
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 19, 2023, 11:41 AM IST

Updated : Sep 19, 2023, 12:56 PM IST

புதுடெல்லி: பிளாஸ்டர் ஆப் பாரீஸ் உள்ளிட்ட ரசாயனம் கொண்டு தயாரிக்கப்பட்ட விநாயகர் சிலைகளை விற்க தடை விதித்த சென்னை உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பில் தலையிட முடியாது என உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தெரிவித்து உள்ளார்.

இயற்கைக்கு கேடு விளைவிக்கும் பிளாஸ்டர் ஆப் பாரீஸ் போன்ற ரசாயானம் கலந்த விநாயகர் சிலைகளை விற்க அனுமதிக்கக் கூடாது எனத் தொடர்ந்த வழக்கை அவசர வழக்காக விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், சிலைகளை விற்க தடை விதித்து கடந்த செப்.16 ஆம் தேதி சனிக்கிழமை உத்தரவிட்டது.

ஆனால் இந்த உத்தரவை எதிர்த்து, மனுதாரர் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் நேற்று (செப்.18) மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த மேல்முறையீட்டு வழக்கை தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான, நீதிபதிகள் ஜே.பி.பர்திவாலா, மனோஜ் மிஸ்ரா ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்தது.

மனுதாரர் பிரகாஷ் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் ஷியாம் திவான் கூறியதாவது, "மனுதாரர் பிளாஸ்டர் ஆப் பாரிஸ் ரசாயனம் கலந்த 150 சிலைகளை செய்துள்ளதாகவும், அதற்கு ஏற்கனவே சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்த நிலையில், மீண்டும் அவற்றை செயற்கை நீர்நிலைகளில் கரைக்கலாம் என உத்தரவு அளித்ததாகவும் வாதிட்டார்.

இதையடுத்து, கரைக்க முடியாத சிலைகளை விற்பதால் என்ன பயன் என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். அப்போது செயற்கை நீர்நிலைகளில் சிலைகளை அப்புறப்படுத்தலாம் என மத்திய மாசுக்கட்டுப்பாடு வாரியம் (CPCB) அறிவித்துள்ளதாக தெரிவித்த அவர், தனது மனுதாரருக்கு பெருளாதார ரீதியாக நஷ்டம் ஏற்படும் எனவும் வழக்கறிஞர் திவான் தெரிவித்தார்.

தொடர்ந்து தமிழ்நாடு அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் அமித் ஆனந்த் திவாரி, "விநாயகர் சதுர்த்தி துவங்குவதற்கு முன்பு விற்பனை செய்யப்படும் சிலைகளில் பிளாஸ்டர் ஆப் பாரிஸ் கலந்திருப்பதாக கிடைத்த தகவலலை அடுத்து விசாரணை நடத்திய போலீசார் மற்றும் அதிகாரிகள் சிலை விற்பனைக்கு தடை விதித்து தயாரிப்பு குடோனுக்கு சீல் வைத்தனர். அதன் பிறகு மனுதாரர் இந்த வழக்கை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்து உள்ளார் எனத் தெரிவித்தார்.

மேலும் அந்த மனுவை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற தனி நீதிபதி, மாசுக் கட்டுப்பாட்டின் விதிகள் மற்றும் விதிமுறைகளுக்கு உகந்த சிலைகளை உருவாக்க வேண்டும் எனவும், மேலும் இயற்கைக்கு எதிரான சிலைகளை நதிநீர் போன்ற நீர்நிலைகளில் கறைக்க அனுமதி மறுத்தும் உத்தரவிட்டார். தற்போது அந்த தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவுக்கு தடை விதிக்கக்கோரி மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது என தெரிவித்தார்.

பிளாஸ்டர் ஆஃப் பாரிஸ் அல்லது பிளாஸ்டிக்கால் உருவாக்கப்பட்ட சிலைகளை தயாரிக்கவும், விற்பனை செய்வதற்கும், நீர்நிலைகளில் மூழ்கடிப்பது போன்ற செயல்களை செய்பவர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என தெரித்தார். மேலும் அவர்கள் விதிகளை மீறி சிலைகளை தயாரித்ததற்காக அவர்கள் சிலை செய்யும் உரிமத்தையும் ரத்து செய்யக்கோரி தெரிவித்தார்.

தொடரந்து இரு தரப்பு வாதங்களையும் கேட்ட உச்ச நீதிமன்ற நீதிபதிகள், சென்னை உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பில் தலையிட முடியாது எனக் கூறியும், பிளாஸ்டர் ஆஃப் பாரிஸ் போன்ற ரசாயனங்களால் உருவாக்கப்பட்ட சிலைகளை பொது நீர்நிலைகளில் கரைக்கக்கூடாது என உத்தரவிட்டு வழக்கை தள்ளுபடி செய்தனர்.

இதையும் படிங்க: இது புதுசா இருக்கே... வீடியோ காலில் விநாயகரை வழிபட்ட பெண்!

Last Updated : Sep 19, 2023, 12:56 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.