ஆந்திரா உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி ஜே.கே. மகேஷ்வரியை சிக்கிம் மாநிலத்திற்கு மாற்ற உச்ச நீதிமன்ற கொலிஜியம் பரிந்துரை செய்துள்ளது. அதேபோல், சிக்கிம் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி ஏ.கே. கோஸ்வாமியை ஆந்திரா உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக மாற்ற உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.ஏ. பாப்டே தலைமையிலான கொலிஜியம் முடிவு எடுத்துள்ளது.
நீதிபதிகளை மாற்ற தீர்மானம்
முன்னதாக, நேற்று, தெலங்கானா உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி ஆர்.எஸ். சவுகானை உத்தரகாண்ட் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக மாற்ற கொலிஜியம் தீர்மானம் நிறைவேற்றியது. அதேபோல், டெல்லி உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி ஹிமா கோலி தெலங்கானா உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக மாற்ற பரிந்துரைக்கப்பட்டுள்ளது.