மத்தியப்பிரதேசம்: மத்தியப் பிரதேச மாநிலம், குவாலியரில் உள்ள படா கிராமத்தில் வசிக்கும் 26 வயதான பெண்மணி ஒருவர், தனது கணவர் இக்பால் மீது பரபரப்பு புகார் ஒன்றை கொடுத்துள்ளார்.
அதில், "தனக்கு கடந்த 2021-ம் ஆண்டு திருமணம் நடந்ததாகவும், மாமியார் வீட்டிற்கு சென்றதிலிருந்து தனது கணவர் தன்னை சித்திரவதை செய்வதாகவும் குறிப்பிட்டுள்ளார். தனது கணவர் தினமும் வித்தியாசமான முறைகளில் உடலுறவு கொள்ளும்படி தன்னை வற்புறுத்துவதாகவும், அப்போது தான் மறுத்தாலோ அல்லது கூச்சலிட்டாலோ தன்னை கொடூரமாக தாக்குகிறார் என்றும் தெரிவித்துள்ளார்.
சில நேரங்களில் தன் மீது மின்சாரம் பாய்ச்சி சித்திரவதை செய்ததாகவும், சுமார் ஓராண்டாக இந்த கொடுமைகளை தான் அனுபவித்து வருவதாகவும் குறிப்பிட்டுள்ளார். இதுதொடர்பாக தனது மாமியரிடம் கூறியபோதும், அவர் கண்டு கொள்ளாததால் போலீசில் புகார் அளிப்பதாகத் தெரிவித்துள்ளார்.
கணவர் மீதும், அவருக்கு உடந்தையாக இருந்த மாமியார் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்" என அப்பெண்மணி கோரிக்கை வைத்துள்ளார். இந்தப் புகார் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார், அந்த பெண்மணியின் கணவர் இக்பாலை தேடி வருகின்றனர்.