ETV Bharat / bharat

கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைக்க சவுதி முடிவு! பெட்ரோல், டீசல் விலை உயருமா? - Non Opec Countries

தினசரி கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைக்க சவுதி அரேபியா திட்டமிட்டு உள்ளது.

Etv Bharat
Etv Bharat
author img

By

Published : Apr 3, 2023, 7:04 AM IST

துபாய் : தினசரி கச்சா எண்ணெய் உற்பத்தியை 5 லட்சம் பீப்பாய்களாக குறைக்க சவுதி அரேபியா அரசு திட்டமிட்டு உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதனால் இந்தியா உள்ளிட்ட நாடுகளில் பெட்ரோல், டீசல் உள்ளிட்ட எரிபொருள்களின் விலை உயரும் அபாயம் உள்ளதா என்ற பல்வேறு கேள்விகள் எழுந்து உள்ளன.

எண்ணெய் உற்பத்தி செய்யும் நாடுகள் ஒபெக், நான் ஒபெக் என இரு கூட்டமைப்புகளாக செயல்பட்டு வருகின்றன. இதில் ஒபெக் அமைப்பு 1960 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் பாக்தாத் நகரில் துவக்கப்பட்டது. துவக்க காலத்தில் ஈரான், ஈராக், குவைத், சவுதி அரேபியா மற்றும் வெனிசூலா ஆகிய நாடுகளை மட்டும் உறுப்பினர்களாக கொண்டு இந்த அமைப்பு இயங்கி வந்தது.

1960 ஆண்டு வாக்கில் வெனிசூலாவின் எண்ணெய் உற்பத்தியை முடக்கி, கனடா உள்ளிட்ட நாடுகளில் இருந்து எண்ணெய் வளத்தை பெருக்க அப்போதைய அமெரிக்க அதிபர் கொண்டு வந்த சட்டத்தை தொடர்ந்து, வெனிசூலா, ஈரான், சவுதி உள்ளிட்ட நாடுகள் ஒன்றிணைந்து இந்த ஒபெக் கூட்டமைப்பை தொடங்கியதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இதையடுத்து 1965 ஆம் ஆண்டு இந்த ஒபெக் கூட்டமைப்பு ஆஸ்திரியா தலைநகர் வியன்னாவுக்கு மாற்றப்பட்டு, அங்கிருந்து இயங்கத் தொடங்கியது. இந்த கூட்டமைப்பில் உறுப்பினர்கள் எண்ணிக்கை மெல்ல உயரத் தொடங்கிய நிலையில் தற்போது 13 நாடுகள் அங்கம் வகிக்கின்றன.

உற்பத்தியை காட்டிலும் இறக்குமதி அளவு உயர்ந்ததை அடுத்து கடந்த 2008ஆம் ஆண்டு இந்தோனேசியா இந்த அமைப்பில் இருந்து விலகியது. ஒபெக் அமைப்பை போன்று நான் ஒபெக் அல்லது ஒபெக் பிளஸ் நாடுகள் அமைப்பும் உள்ளன. அந்த அமைப்பில் ரஷ்யா உள்ளிட்ட 11 நாடுகள் அங்கம் வகிக்கின்றன.

இந்த ஒபெக் கூட்டமைப்பில் அதிக உற்பத்தி திறன் கொண்ட நாடாக சவுதி அரேபியா உள்ளது. உலக அளவிலான பொருளாதாரம் கச்சா எண்ணெய் மற்றும் அது தொடர்பான விலையை பொருத்தே இயங்கி வருகிறது. இந்நிலையில் கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்து அதன் சந்தை மதிப்பை ஏற்ற ஒபெக் நாடுகள் திட்டமிட்டு உள்ளன.

இதையடுத்து தினசரி கச்சா எண்ணெய் உற்பத்தியை 5 லசம் பீப்பாய்களாக குறைக்க உள்ளதாக சவுதி அரேபியா அறிவித்து உள்ளது. வரும் மே மாதம் தொடங்கி இந்த ஆண்டு இறுதி வரை தினசரி 5 லட்சம் பீப்பாய் என்ற அளவுடன் உற்பத்தியை மேற்கொள்ள திட்டமிட்டு உள்ளதாக சவுதி அரேபிய எரிசக்தி துறை அமைச்சர் தெரிவித்து உள்ளார்.

அதேபோல் தினசரி கச்சா எண்ணெய் உற்பத்தியை பத்து லட்சம் பீப்பாய்களாக குறைக்க ஒபெக் நாடுகள் திட்டமிட்டு உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. இந்த அறிவிப்பு மூலம் அமெரிக்கா - சவுதி அரேபியா இடையிலான புகைச்சல் மேலும் அதிகரிக்கும் எனக் கூறப்படுகிறது. கடந்த ஆண்டு அமெரிக்க இடைக்கால தேர்தலின் போது பண வீக்கம் உள்ளிட்ட பிரச்சினைகள் காரணமாக கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைக்கக் கூறி போது சவுதி மற்றும் ஒபெக் நாடுகள் அதை மறுத்ததாக சொல்லப்படுகிறது.

இதையும் படிங்க : பிரதமர் மோடி அவதூறு வழக்கு - ராகுல் காந்தி இன்று மேல்முறையீடு!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.