ETV Bharat / bharat

சவுதி செல்லும் இந்தியர்களுக்கு ஸ்பெஷல் அனுமதி - சவுதி அரசின் அறிவிப்பால் பயணிகள் மகிழ்ச்சி... - police clearence certificate

இந்தியாவுடன் தொடரும் நீண்ட கால நல்லுறவின் காரணமாக விசா வழங்க தேவையான போலீஸ் அனுமதி சான்று பெறுவதில் இருந்து இந்தியர்களுக்கு விலக்கு அளிப்பதாக சவுதி அரசு அறிவித்துள்ளது.

சவுதி அரேபியா தூதரகம்
சவுதி அரேபியா தூதரகம்
author img

By

Published : Nov 18, 2022, 10:19 AM IST

டெல்லி: வெளிநாட்டு வேலைக்கு செல்ல வேண்டும் என்பது பெரும்பாலன இந்தியர்களின் கனவாக உள்ளது. அப்படி வெளிநாட்டு வேலைக்கு செல்ல விரும்புபவர்களின் முதல் தேர்வாக அரபு நாடுகள் உள்ளன. அதில் ஒன்றாக சவுதி அரேபியா இருக்கிறது.

அரபு நாடுகளிலே அதிகபட்சமாக சவுதி அரேபியாவில் தான் இந்தியர்கள் அதிகம் தங்கி பணிபுரிந்து வருகின்றனர். மேலும் சுற்றுலா செல்வோரின் விரும்பும் பட்டியலில் சவுதி அரேபியா முக்கிய இடம் வகிக்கிறது.

கரோனாவுக்கு முன் விசா பெறுவதில் இருந்த நடைமுறைகள், கோவிட்க்கு பிந்தைய காலக்கட்டத்தில் பல்வேறு மாற்றங்களை அடைந்துள்ளன. போலீஸ் அனுமதி சான்று பெறுவதில் இருக்கும் சிக்கல் உள்ளிட்ட காரணங்களால் வெளிநாடு செல்வோருக்கு பெரும் தலைவலியாக உள்ளது. இந்நிலையில், சவுதி அரேபிய அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பு வெளிநாடு செல்ல விரும்புவோருக்கு இன்ப அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

  • In view of the strong relations and strategic partnership between the Kingdom of Saudi Arabia and the Republic of India, the Kingdom has decided to exempt the Indian nationals from submitting a Police Clearance Certificate (PCC). pic.twitter.com/LPvesqLlPR

    — Saudi Embassy in New Delhi (@KSAembassyIND) November 17, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

டெல்லியில் உள்ள சவுதி அரேபிய நாட்டின் தூதரகம் வெளியிட்டு உள்ள அறிக்கையில், இந்தியா - சவுதி இடையிலான நீண்ட கால நல்லுறவின் அங்கமாக விசாவுக்கு தேவையான போலீஸ் அனுமதி சான்று பெறுவதில் இருந்து இந்தியர்களுக்கு விலக்கு அளிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இதன்மூலம் விசா நடைமுறை எளிதாக அமையும் என்றும் அதிகளவிலான இந்தியர்கள் சவுதி வர வழிவகை செய்யும் என கூறப்படுகிறது. ஏறத்தாழ 20 லட்சம் இந்தியர்கள், சவுதி அரேபியாவில் அமைதியான முறையில் வாழ்ந்து வருவதற்கு மதிப்பளிக்கும் வகையில் இந்த சலுகை வழங்கப்பட்டு உள்ளதாக சவுதி அரசு தெரிவித்துள்ளது.

கரோனாவுக்கு பின் மீண்டும் வெளிநாடு செல்ல திட்டமிடுபவர்களுக்கு சவுதி அரசின் அறிவிப்பு நல்வாய்ப்பாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படிங்க: மாணவி பிரியா தவறான சிகிச்சையால் உயிரிழப்பு: மருத்துவர்கள் மீது வழக்கு!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.