புதுச்சேரியில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் உயர்ந்துக்கொண்டே வருகிறது. இதனையடுத்து கரோனா பரவலை கட்டுப்படுத்தும் விதமாக வெள்ளிக்கிழமை இரவு, சனி, ஞாயிற்று கிழமைகளில் முழு ஊரடங்கு அமல்படுத்தமாறு புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் அறிவித்துள்ளார்.
இதனையடுத்து, இன்று (ஏப்ரல் 24) சில தளர்வுகளுடன் ஊடரங்கு அமலுக்கு வந்துள்ளது. முழு ஊரடங்கு அமலில் இருந்தாலும், அத்தியாவசிய தேவைகளான மருந்தகம், பால், பெட்ரோல், மளிகை, காய்கறி கடைகள், இறைச்சி, மீன் கடைகள் இயங்குவதற்கு சில கட்டுப்பாடுகளுடன் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. உணவகங்களில் பார்சலுக்கு மட்டும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. பேருந்து, ஆட்டோ உள்ளிட்ட பொது போக்குவரத்திற்கும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அரசு பணி உள்பட அத்தியாவசிய பணியில் இருப்போர் அடையாள அட்டை வைத்திருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.