ETV Bharat / bharat

சாத்தான்குளம் வழக்கு: அனைவரது பிணை மனுக்களும் தள்ளுபடி - சாத்தன்குளம் வழக்கில் பிணை மனுக்கள் தள்ளுபடி

உச்ச நீதிமன்றம்
உச்ச நீதிமன்றம்
author img

By

Published : Sep 7, 2021, 5:15 PM IST

Updated : Sep 7, 2021, 5:26 PM IST

15:24 September 07

தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளத்தைச் சேர்ந்த வணிகர்களான தந்தை ஜெயராஜ் - மகன் பென்னிக்ஸ் இருவரும் 2020ஆம் ஆண்டு ஜூன் 19ஆம் தேதி காவல் துறை விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட நிலையில் காவல் துறையினரின் தாக்குதலுக்கு உள்ளாகி உயிரிழந்தனர்.

இது தொடர்பாக எழுந்த குற்றச்சாட்டின் அடிப்படையில் தொடரப்பட்ட வழக்கில், சாத்தான்குளம் காவல் நிலைய ஆய்வாளர் ஸ்ரீதர், உதவி ஆய்வாளர்கள் பாலகிருஷ்ணன், ரகு கணேஷ், தலைமைக் காவலர் முருகன், காவலர்கள் முத்துராஜ், காவலர்கள் செல்லதுரை, வெயிலு முத்து, தாமஸ் பிரான்சிஸ், சமயதுரை உள்ளிட்ட ஒன்பது பேர் மீது சிபிஐ தரப்பில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.

இந்த நிலையில், இந்த வழக்கில் கைதானவர்கள் பிணை கோரி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். இந்த வழக்கு இன்று உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது அனைவரின் பிணை மனுக்களும் தள்ளுபடி செய்யப்பட்டது.

இதையும் படிங்க: விநாயகர் சிலை தயாரிக்கும் தொழிலாளர்களுக்கு கூடுதலாக ரூ.5,000 ஊக்கத்தொகை

Last Updated : Sep 7, 2021, 5:26 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.